மீண்டும் ‘ரீமேக்’ கதையில் அஜித்குமார்?

அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்துள்ளது. இந்த படம் அமிதாப்பச்சன் நடித்து இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக வந்தது.

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி இருந்தார். மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குகிறது.

இதில் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்துக்கு பிடித்தமான கார்பந்தயம் மற்றும் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. புதிய படத்துக்காக நரைமுடிகளை கருப்பாக்கி இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். உடல் எடையையும் குறைத்துள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த படத்தை முடித்து விட்டு அஜித்குமார் நடிக்க உள்ள 61-வது படம் பற்றிய தகவலும் தற்போது கசிந்துள்ளது. இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘ஆர்ட்டிக்கிள் 15’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் உரிமை போனிகபூரிடம் உள்ளது. அவரே தமிழில் தயாரிப்பாரா? என்பது தெரியவில்லை. ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் கதை அஜித்துக்கும் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் மற்றும் இதர நடிகர், நடிகைகள் விரைவில் முடிவு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related posts