அரசியல் தீர்வு சர்வதேச இறக்குமதி பண்டமல்ல..

இந்த நாட்டின் நிலைத் தன்மைக்கேற்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். தவிர தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் மேலும் மேலும் பாதிப்புகளையே அடைய வேண்டியிருக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை, நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை உற்பத்தி வரி விசேட எற்பாடு சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் - நாம் இங்கு ஏற்றுமதி அபிவிருத்தி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் இங்கு சிலர் இறக்குமதி அரசியல் தீர்வு குறித்தே காலம்பூராகவும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். நாய் கடித்தால் என்ன,. பூச்சி பூரான் கொட்டினால் என்ன, அருகில் உள்ள வைத்தியசாலையையை…

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை…

யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 80 பேர் கொண்ட குழுவினர் இன்று(05)நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர். பலாலி விமான நிலையத்தின் விமான போக்குவரத்து ஆரம்ப சேவைகள் அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.அதற்காக அபிவிருத்திப்பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. விமான நிலைய அபிவிருத்தியின்போது,ஓடுபாதைகள் சீரமைப்பு செய்யப்படுவதுடன் பயணிகள் விமான நிலையத்துக்குள் வருவதற்கு காங்கேசன்துறை பக்கமாக உள்ள வீதி பயன்படுத்தப்படவுள்ளது. இந்த அபிவிருத்திப் பணிகளை பார்வையிட கொழும்பில் இருந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் இன்று காலை பலாலிக்கு வருகை தந்தனர். அவர்களுடன் வந்த குழுவில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், பொறியியலாளர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி ஆகியோர் அடங்குகின்றனர்.

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி ஶ்ரீதேவி ரயில்

கொழும்பில் இருந்து வவுனியா வரை பயணித்த கடுகதி (இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) ரயில், இன்று (05) முதல் காங்கேசந்துறைவரை “ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்” ஆக தனது சேவையை ஆரம்பித்துள்ளது. கொழும்பு,கோட்டையிலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை இரவு 10.00 மணிக்குவந்தடைந்து,காங்கேசந்துறைக்குஇரவு 10.16 மணிக்கு குறித்த ரயில் சென்றடையும். பொல்கஹவெல, குருநாகல், மாஹோ, கல்கமுவா, தம்புத்தேகம, அநுராதபுர புதிய நகரம், அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, அறிவியல் நகர், கிளிநோச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், காங்கேசந்துறை ஆகிய இடங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும். குறித்த ரயிலானது காங்கேசந்துறையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தை வந்தடைந்து,யாழ்ப்பாணத்தில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்பட்டு கொழும்பு கோட்டைக்கு முற்பகல்10.24 மணிக்கு சென்றடையவுள்ளது. காங்கேசந்துறை, யாழ்ப்பாணம், கொடிகாமம், கிளிநொச்சி, அறிவியல் நகர், வவுனியா, மதவாச்சி, அநுராதபுரம்,அநுராதபுர புதிய நகரம், தம்புத்தேகம, கல்கமுவ, மாஹோ,…

மீண்டும் ‘ரீமேக்’ கதையில் அஜித்குமார்?

அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்துள்ளது. இந்த படம் அமிதாப்பச்சன் நடித்து இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக வந்தது. போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி இருந்தார். மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குகிறது. இதில் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்துக்கு பிடித்தமான கார்பந்தயம் மற்றும் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. புதிய படத்துக்காக நரைமுடிகளை கருப்பாக்கி இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். உடல் எடையையும் குறைத்துள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த படத்தை முடித்து விட்டு அஜித்குமார் நடிக்க உள்ள 61-வது படம் பற்றிய தகவலும் தற்போது கசிந்துள்ளது. இந்தியில் வெளியாகி தேசிய…

பாடகர்களுக்கு லதா மங்கேஷ்கர் அறிவுரை

மும்பை ரெயில் நிலையத்தில் பாடகி லதா மங்கேஷ்கர் பாடலை பாடி பிச்சை எடுத்த ரானு மண்டல் என்ற பெண் சமூக வலைத்தளத்தில் வைரலானார். இதையடுத்து அவருக்கு இந்தி படங்களில் பாட வாய்ப்புகள் வந்துள்ளன. லதா மங்கேஷ்கர் இதுகுறித்து கூறியதாவது:- “என்னைப் போல் ஒருவர் பாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் மற்றவர்கள் குரலை காப்பி அடிக்க கூடாது. தங்களுக்கு உள்ள சொந்த குரலை அடையாளம் கண்டுபிடித்து அதன்படி பாட வேண்டும். அதுவே அவர்களை தனித்தன்மையுடன் நிலை நிறுத்தும். நான் பல இசை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்கிறேன். அதில் கலந்து கொள்ளும் குழந்தைகள் என்னைப் போலவே பாடுகிறார்கள். அதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி மேடையில் பாடியவர்களில் இப்போது ஸ்ரேயா கோஷலும், சுனிதி சவுகானும் பிரபல பாடகர்களாக மாறி உள்ளார்கள். எனது குரலிலும் மற்ற…

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை

சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகம் வெளிநாட்டினரை கவரும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு விளையாட்டு, அரசியல், சினிமா துறைகளில் உலக புகழ் பெற்றவர்களின் மெழுகு சிலைகள் உள்ளன. மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் தெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கஜோல், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. நிஜத்தில் இருப்பதுபோல் இந்த சிலைகளை வடிவமைத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் மெழுகு சிலைகள் அருகில் நின்று படம் எடுத்து மகிழ்கிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 20 கலைஞர்கள் 5 மாதங்களாக சிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது பணிகள் நிறைவடைந்து ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை அங்கு நிறுவி உள்ளனர். அதை பார்த்தவர்கள் அச்சு அசல் ஸ்ரீதேவி போல…

74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை பாட்டி

ஆந்திரவைச் சேர்ந்த 74 வயது பாட்டி, உலகின் மிக வயதான பெண்மணி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்து உள்ளார். 74 வயதில் ஒரு பெண் தாயாக முடியுமா? என்றால் ஆந்திராவில் குண்டூரில் உள்ள மருத்துவர்கள் ஆம் என்று ஒரு உறுதியான பதில் கூறி உள்ளனர். 74 வயதான எர்ராமட்டி மங்கம்மா என்ற பெண் சிசேரியன் (சி-பிரிவு) அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார். இதற்கு முன் பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள தல்ஜீந்தர் கவுர், 2017-ம் ஆண்டில், தனது 72-வது வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். எர்ராமட்டி குழந்தையை வெற்றிகரமாக பிரசவித்ததால், அவர் 74 வயதில் குழந்தை பெற்றெடுத்த உலகின் மிக வயதான பெண்மணி ஆகி உள்ளார். உண்மையில், இன் விட்ரோ கருத்தரித்தல் (ஐவிஎஃப்) போன்ற 'உதவி இனப்பெருக்க' மருத்துவ தொழில் நுட்பங்களின்…