ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ​வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்பட்டு விட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று(31) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு விடுக்கப்படவில்லை எனவும், மற்றைய கட்சிகள் தனது வேட்பாளர்களை உடனடியாக அறிவித்திருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சி அப்படி அவசரப்படத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், எமது பயணத்தை நாம் செல்வோம். குழப்பமடைய வேண்டாம். எங்களது வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எதிர்க்கட்சிக்கு இதனை சொல்கிறேன்.

எமது வேட்பாளர் யார் என்று நாம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தீர்மானித்து விட்டோம்.

அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருங்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Related posts