சஜித் தரப்பு எம்.பிக்கள் மங்கள இல்லத்தில் இரகசிய சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு எம்.பிக்களின் முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் இரவு அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 40ஐ.தே.க எம்.பிக்கள் கலந்து கொண்டதாக தெரியவருகிறது. இச் சந்திப்பு இரவு 7மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுஜீவ சேனசிங்க, பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றது. எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வழிவகைகள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது. இன்னும் ஒரு வாரம் அல்லது ஒன்றரை வாரத்தினுள் ஜனாதிபதி வேட்பாளர் முடிவு செய்யப்படுவார். அத்தோடு தேர்தல் பணிகளில் முழுமையாக இறங்க இருக்கிறோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க விருப்பம் தெரிவிக்கும் நிலை எதிர்வரும் தினங்களில் உருவாகும் எனவும் அவர் கூறினார். அமைச்சர்…

இந்து சமுத்திர பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் கூடுதல் கவனம்

கடல்வழி வர்த்தகம், சக்தி வளம். அகழ்வு மற்றும் இராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்தார். பிராந்தியத்தின் அமைதி, சமாதானம் மற்றும் ஸ்தீரதன்மைக்கு மதங்களை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதக் குழுக்களின் செயற்பாடுகள் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே, உலகளாவிய ரீதியிலும் பிராந்திய மட்டத்திலும் அமைதி, சமாதானம், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தனித்தனியாக செயற்படுவதைவிட ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே இலக்கை அடைய முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். இலங்கை இராணுவம் வருடாந்தம் நடத்திவரும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. “சமகால பாதுகாப்பு சூழலில் மாறிவரும் இராணுவத்தின் சிறப்பியல்பு” என்ற தொனிப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றுவரும் இம் மாநாட்டின்…

விஷத்தன்மை கொண்ட உணவு இலங்கை முதலிடம்

உலகில் இரசாயனக்கலப்புடனான விஷத்தன்மை கொண்ட உணவுவகைகளை உட்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம் வகிப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்கள பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜனக லீன்தர தெரிவித்தார். மாத்தளையில் இடம் பெற்ற ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கான சேவைகாலப் பயிற்சி வகுப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உணவு உற்பத்தி செய்யும் நிலம் முதல் உணவுத் தட்டுவரையான சகல விடயங்களிலும் உணவுப் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்தவேண்டியுள்ளது. உற்பத்தி மற்றும் எடுத்துச் செல்லல், களஞ்சியப்படுத்தல் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் உணவு பழுதடையாமல் இருக்க இராசாயனக் கலப்புகள் சேர்க்கப்படுகின்றன. அவை உட்கொள்ளக் கூடாதவைகளாகும். நல்ல விவசாயப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவதன் ஊடாக அதனைத் தவிர்த்துக்கொள்ள முடியும். முறையற்ற விதத்தில் இரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை எல்லைப்படுத்தல் மற்றும் தரமான உணவுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக உறுதிப்படுத்தல், சுற்றாடலுக்கு இசைவான மற்றும் செலவில்…

யாழில் ஒரே நாளில் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளிலான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு இன்று (30) யாழிற்கு வருகை தந்திருந்தார். விவசாயம் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சும் மற்றும் ஆசிய வங்கியின் 13 ஆயிரத்து 500 பில்லியன் ரூபா நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்திற்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்ததுடன், அடிக்கல்லினை நாட்டி வைத்தார். இந்த நிகழ்வில், விவசாயம் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ஹரிசன் பெர்னான்டோ மற்றும் வடமாகாண ஆளுநார் சுரேன் ராகவன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ சுமந்திரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமாநாதன், மஸ்தான் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், நீரியல்வளத்துறை அதிகாரிகள், பொது மக்கள்…