காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறலை மறைக்க போலி தீவிரவாத எதிர்ப்பு

ஜம்மு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்சனைகளை திசை திருப்ப போலியான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்திய தலைமை நடத்தும் என சர்வதேச சமூகத்தை எச்சரிப்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டர் பக்கத்தில்,” நாச செயல்களில் ஈடுபடுவதற்காக இந்திய எல்லையில் ஆப்கானிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், மற்றும் சிலர் தென் மாநிலங்களிலும் ஊடுருவி இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக நாங்கள் கேள்விப்பட்டோம். இந்த குற்றச்சாட்டுகள் காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்ப இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சி என்பதை கணிக்க முடிகிறது. ஜம்மு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்சனைகளை திசை திருப்ப போலியான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்திய தலைமை நடத்தும் என்று சர்வதேச சமூகத்தை எச்சரிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். காஷ்மீர் இந்தியாவின் அதிகாரபூர்வ பகுதி அல்ல,…

காஷ்மீர் சென்ற 11 தலைவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்

காஷ்மீர் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 11 தலைவர்களும் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை நேரில் அறியவும், காஷ்மீர் மக்களுடன் உரையாடவும் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (சனிக்கிழமை) ஜம்மு-காஷ்மீருக்கு சென்றனர். இந்தக் குழுவில் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ஷரத் யாதவ், தினேஷ் த்ரிவேதி, திருச்சி சிவா, மஜீத் மேமன், மனோஜ் ஜா, குபேந்திரா ரெட்டி ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே அவர்களை தடுத்து நிறுத்தி டெல்லிக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக குலாம் நபி ஆசாத் இரண்டு முறை தனியாக…

பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா

இந்த படத்துக்கு ஆசிய சாதனைக்கான விருது மற்றும் சான்றிதழ் கிடைத்து உள்ளது. விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசியதாவது:- “ஒத்த செருப்பு படத்தை பார்த்துவிட்டு அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. தனி ஒரு ஆள் மட்டும் கால் மணி நேரமோ அரை மணி நேரமோ நடிக்கலாம். ஆனால் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் முழு படத்திலும் தோன்றுவதெல்லாம் விளையாட்டு விஷயமில்லை. அதையும் மிக அற்புதமாக செய்திருக்கிறார் பார்த்திபன். யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று சொல்லும் நானே, புதிய பாதையில் பார்த்திபன் நாயகனாக நடிக்கிறார் என்பது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். புதிய பாதையில் தன்னை நிரூபித்த பார்த்திபன் இன்று நடிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டு இருக்கிறார். ஒத்த செருப்பு படம் மூலம் உலகத்தையே தமிழ்ப்படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க…

நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து? பட உலகில் பரபரப்பு

நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்தாகி விட்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அனிஷா நீக்கி உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு தலைவரானார். விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருக்கும் காதல் மலர்ந்தது. அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். விஜய் தேவரகொண்டாவுடன் பெல்லி சூப்லு மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். விஷால்- அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி ஐதராபாத்தில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். அக்டோபர் மாதம் திருமணத்தை நடத்த…

ழையின் உதவிக்காக பிரார்த்திப்போம் – நடிகர் விவேக்

உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும் அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது. அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் அந்நாட்டு ராணுவத்தை அனுப்பி உள்ளது. சர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அமேசான் காடுகளில் பற்றி…

ஒரு வருட காலத்திற்குள் 7 முக்கிய தலைவர்களை இழந்த பாஜக !

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 66-வயதான அருண் ஜெட்லி, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அருண் ஜெட்லியின் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாஜக கடந்த ஒரு வருடத்தில் அருண் ஜெட்லி உட்பட அதன் ஏழு முக்கிய தலைவர்களை இழந்துள்ளது. அவர்களில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் ஆகியோர்…

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை – ராகுல்காந்தி

காஷ்மீரில் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை என்று ராகுல்காந்தி எம்.பி., தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370வது பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள் என்று மத்திய அரசு கூறினாலும் அங்கு பெரும்பாலான இடங்களில் இன்னும் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்படவில்லை. மாநிலத்தை பார்வையிட கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் சென்றபோது ஸ்ரீநகரில் இருந்து திருப்பி விடப்பட்டனர். ஏற்கனவே காஷ்மீருக்கு 2 முறை செல்ல முயன்ற குலாம்நபி ஆசாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

அருண் ஜெட்லி மரணம்: பிரதமர்-ஜனாதிபதி மற்றும் தலைவர்கள் இரங்கல்

அருண் ஜெட்லி மரணம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி-ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிற்பகல் 12.07 மணியளவில் ஜெட்லி உயிரிழந்துவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அருண் ஜெட்லி மறைவு செய்தி கேட்டதும் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாளை நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி. முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவைத் தொடர்ந்து சென்னையிலிருந்து நெல்லூருக்கு புறப்படவிருந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லிக்குத் திரும்புகிறார். அருண் ஜெட்லி மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் , நோயுடன் துணிச்சலுடனும், கண்ணியத்துடனும் போராடிய ஸ்ரீ அருண் ஜெட்லியின்…