விஜய் சேதுபதியுடன் ஜோடி சேருகிறார், காஜல்

விஜய் சேதுபதி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கடந்த ஆண்டு ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய தெலுங்கு படத்தில் ஒன்று, ‘அவ்.’ காஜல் அகர்வால், நித்யாமேனன், ரெஜினா உள்பட பல முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்து இருந்தனர். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இரண்டாம் பாகத்திலும் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இரண்டு பேரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்கிறார், படத்தின் டைரக்டர் பிரசாந்த் வர்மா. “முதல் பாகத்தில் பல கதைகள் வந்து போனது. இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே கதை மட்டுமே இருக்கும்” என்றும் கூறுகிறார், பிரசாந்த் வர்மா.

அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்?

அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல வசூலும் பார்த்துள்ளது. படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். தற்போது அஜித்குமார் உடல் எடையை குறைத்து புதிய படத்துக்கு தயாராகி உள்ளார். இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத்தே டைரக்டு செய்கிறார். இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக படத்தை தயாரிக்கும் போனிகபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்குமார் மோட்டார் பந்தய வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம் பெறுகின்றன. இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில்…

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவு நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்திய பொருளாதாரம் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான சரிவை சந்தித்துள்ளது. தற்போது 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்து பெரிய சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். பல்வேறு தொழில்முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை மூடும் நிலை உருவாகும். அதேபோல் லட்சக்கணக்கானோர் வேலையை இழக்க வேண்டிய நிலை உருவாகி வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். இந்த பொருளாதார சரிவு இப்போதே ஆட்டோமொபைல் துறையில் எதிரொலித்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். 2019-ம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார…

6 குற்றங்களடங்கிய அறிக்கை சட்ட மாஅதிபரிடம் கையளிப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்தவிக்கரமதுங்க, ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலைகள் உள்ளிட்ட, சர்ச்சைக்குரிய ஆறு குற்றங்கள் தொடர்பான அறிக்கை நேற்று சட்ட மாஅதிபர் டப்புல்ல டி லிவேராவிடம் கையளிக்கப்பட்டது. பதில் பொலிஸ் மாஅதிபர் சீ.டீ. விக்கிரமரத்ன இதனைக் கையளித்தார். கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி சட்ட மாஅதிபரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அறிக்ைக கையளிக்கப்பட்டது. சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ரகர் விளையாட்டு வீரர் தாஜுதீன் படுகொலை, தொண்டர் சேவை உத்தியோகத்தர்கள் 17 பேர் படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை மற்றும் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அறிக்கையே சட்ட மாஅதிபரிடம் கையளிக்கப்பட்டது. குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தினால் மேற்படி குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடொன்று…

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்க எடுக்கும் முயற்சி ஒரு நாடகம்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்க எடுக்கும் முயற்சி அப்பட்டமான ஒரு நாடகம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறப்பதற்கான நடவடிக்கைகளை ஓ.எம்.பி அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அமைப்புக்கள் கடும் கண்டணத்தை தெரிவித்து வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அறிக்கை ஒன்றை விடுத்து தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் இதனை கண்டித்துள்ளார். ஓ.எம்.பி அலுவலகத்தால் இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அவர், தற்போது யாழில் அதன் அலுவலகத்தை திறக்க எடுக்கும் முயற்சி வெறும் கண் துடைப்பு எனவும் அவர் சாடியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர்…