அலைகள் வாராந்த பழமொழிகள் 22.08.2019

01. எப்போதுமே அவையில் துணிச்சலாக பேசுங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க அது மிக அவசியம். 02. பேசும்போது புன்னகை அவசியம் தன்னம்பிக்கையை தருவதுதான் புன்னகை. சிரிக்கும் ஒருவர் மீது மற்றவர் கோபம் கொள்ள முடியாதல்லவா..? 03. அரை குறையாக புன்னகைப்பது நீங்கள் விரும்பும் வெற்றியை உங்களுக்கு பெற்றுத்தரமாட்டாது. 04. அதற்காக சும்மா புன்னகைத்தபடி அலைவதல்ல.. புன்னகையின் சக்தியை பயன்படுத்துங்கள் என்பதே அதன் பொருளாகும். 05. ஒரு சூழ்நிலை குறித்து எதையும் செய்யாமல் இருப்பதால் உங்களுக்கு பயமே அதிகரிக்கிறது. அது தன்னம்பிக்கையை அழித்துவிடுகிறது, உடன் களமிறங்க வேண்டும். 06. பலர் உங்களை பார்த்து குரைக்கலாம் ஆனால் கடிக்கிற நபர்கள் குறைவாகவே இருப்பார்கள். 07. உங்கள் மனச்சாட்சி எதை சொல்கிறதோ அதை செய்யுங்கள். சரியான காரியத்தை செய்வது வெற்றிக்கான ஒரு நடைமுறையாகும். 08. முன் வரிசையில் அமருங்கள், கண்ணோடு கண்…

பிக் பாஸ் நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்தவொரு பயனும் கிடையாது

பிக் பாஸ் நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்தவொரு பயனும் கிடையாது என்று இயக்குநர் அமீர் காட்டமாக பேசினார். கவிராஜ் இயக்கத்தில் ஆரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ’எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’. நீண்ட நாட்கள் கழித்து இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கியுள்ளது ராவுத்தர் பிலிம்ஸ். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாக்யராஜ், அமீர் உள்ளிட்டோர்களுடம் கலந்து கொண்டார்கள். இதில் இயக்குநர் அமீர் பேசும் போது, "நான் இந்த விழாவிற்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் தான். ஒன்று ஆரியின் வற்புறுத்தல், இரண்டாவது ராவுத்தர் பிலிம்ஸ். அதுமட்டுமில்லாமல், நான் வந்தால் என் மூலம் இந்த படத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடும், தரமான படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் தான் வந்தேன். என்னைப் பொருத்தவரை திரைத்துறையில் புகழ்…

ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். இதனிடையே ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய சிபிஐயின் மனுவில் 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ப. சிதம்பரம் நேற்று அதிரடியாக கைது பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு அதிரடியாக கைது செய்தது. 27 மணி நேர தலைமறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீடு திரும்பியதும், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றனர். அவரிடம். சிபிஐ தலைமை அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஐ.என்.எக்ஸ்…

இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின்

நாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யவேண்டும் என்றால் நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம். அதன் மூலம் சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்தலாம் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் பல ஆட்சித்தலைவர்களின் காலம் இருந்தது. ஆனால் எதிர்வரும் காலம் மக்களின், விவசாயிகளின் காலமாக ஏற்படுத்தவேண்டும். அதற்கான சந்தரப்பம் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலின் மூலம் கிடைக்கின்றது. அதற்கு தகுதியுள்ள தலைவரை உருவாக்கும் தேவை மக்கள் மத்தியில் இருந்து தலைதூக்கியுள்ளது. மேலும் பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்களின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு குறித்து மட்டும் தான் பேசுகிறார். நாட்டிற்கு பாதுகாப்பு மாத்திரம்தான் பிரதானமாது என்றால்…

விஷாலை வைத்து படம் எடுப்பதாக ரூ.47 லட்சம் மோசடி

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி போலி ஆவணங்களை காட்டி ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக இயக்குனர் வடிவுடையான் மீது போலீசில் தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்து உள்ளார். நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி போலி ஆவணங்களை காட்டி ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக இயக்குனர் வடிவுடையான் மீது போலீசில் தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்து உள்ளார். போலீசில் புகார் ‘பொட்டு’, ‘சவுகார்பேட்டை’, ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வி.சி.வடிவுடையான். இவர் மீது சென்னை விருகம்பாக்கம், வெங்கடேஷ்நகரை சேர்ந்த தயாரிப்பாளர் நரேஷ்கோத்தாரி(வயது 34) என்பவர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- நான், சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளேன். அசோக் என்பவர் மூலம் திரைப்பட இயக்குனர் வி.சி.வடிவுடையான் எனக்கு அறிமுகம்…

ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது?

தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜிக்கும், அவரது மனைவி இந்திராணிக்கும் சொந்தமான நிறுவனம் ஐ.என்.எக்ஸ். மீடியா. இந்த நிறுவனத்துக்கு 2007–ம் ஆண்டு மொரிஷியசில் உள்ள வெவ்வேறு 3 கம்பெனிகள் மூலம் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமான அன்னிய முதலீடு வந்துள்ளது. இந்த தொகை ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அனுமதிக்கப்பட்ட முதலீட்டை விட அதிகமாகும். இதைத்தொடர்ந்து 2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு துறையும், வருமான வரித்துறையும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றன. இதனை வருமான வரித்துறை, அமலாக்கத்துறைக்கு அனுப்பியது. அதன்பிறகு அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புள்ள ஒரு நிறுவனத்தில் அமலாக்கத்துறை ஆய்வு செய்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் இடையே தொடர்புடைய ஆவணங்கள் சிக்கின. பண பரிமாற்றம், அதுமட்டும் அல்லாமல்…

ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறானது

ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறானது என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப சிதம்பரம் நேற்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறானது என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களுக்க்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், “ சிதம்பரத்தின் கைது விவகாரத்தில் கையாளப்பட்ட விதம் வருத்தம் அளிக்கிறது. இது மிகவும் மோசமானதும் கூட. இந்த வழக்கின் சட்ட விஷயங்களைப் பற்றி நான் பேசவில்லை. ப.சிதம்பரம் மூத்த அரசியல்வாதி,…

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு சற்று நேரத்தில் வெளியாகிறது

ஐஎன்எஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை இன்று ஆஜர்படுத்தினர். அவர் குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி, விவேக் தன்கா ஆகியோர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக வாதாடினர். சிபிஐ தரப்பில் துஷர் மேத்தா ஆஜராகி வாதாடினார். சிபிஐ தரப்பில் ப.சிதம்பரத்துக்கு 5 நாள் காவல் கோரி சி.பி.ஐ மனு தாக்கல் செய்து உள்ளது. ப.சிதம்பரத்துக்கு ஐ என் எஸ் மீடியா வழக்கில் உள்ள தொடர்பு குறித்து துஷர் மேத்தா விளக்கினார். ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அமைதியாக இருப்பது அரசியல் சாசன உரிமை, ஆனால் ப.சிதம்பரம் அமைதியாக இருந்து அனைத்து கேள்விகளையும் தவிர்த்து வருகிறார். அந்த…

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி

ஐஎன்எஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை இன்று ஆஜர்படுத்தினர். அவர் குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி, விவேக் தன்கா ஆகியோர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக வாதாடினர். சிபிஐ தரப்பில் துஷர் மேத்தா ஆஜராகி வாதாடினார். சிபிஐ தரப்பில் ப.சிதம்பரத்துக்கு 5 நாள் காவல் கோரி சி.பி.ஐ மனு தாக்கல் செய்து உள்ளது. இதற்கு, ப சிதம்பரம் தரப்பு வாதிடும் போது, விசாரணை ஏற்கனவே முடிவடைந்து விட்டதால் ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் கேட்ட கேள்விகளையே கேட்டு இருக்கிறார்கள். அதனால் தான் அவர் அமைதியாக இருந்தார். விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டதால், காவலில் எடுத்து…