கோட்டாபய ராஜபக்ஷ மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒருவர்

நாட்டில் உள்ள சகல பிரஜைகளும் எந்தவித சந்தேகமும் இன்றி மாற்றம் ஒன்றை விரும்புவதாகவும் அந்த மாற்றத்தை ஏற்படுத்த கூடியவர் கோட்டாபய ராஜபக்ஷ எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹொக்காந்தர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சகல பிரஜைகளும் கட்சி வேறுபாடின்றி மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும், தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இரண்டு குழுக்கள் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

நாட்டில் உள்ள நான்கு மக்கள் வர்கத்தினரும், நாட்டில் உள்ள கீழ்மட்ட மக்கள் பிரிவில் உள்ளவர்களில் இருந்து மேல் மட்டத்தில் உள்ளவர்கள் வரை அந்த மாற்றத்தை எதிர்பார்பதாகவும் கூறினார்.

கடந்த நான்கு வருடங்களில் நாடு முன்னோக்கி பயணிக்கவில்லை எனவும் மாறாக பின்தள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், அரசாங்கம் பிரதான மூன்று பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

முதலில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டாவதாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியுள்ளதாகவும், இளைஞர் யுவதிகளின் வேலையற்ற பிரச்சினையை தாண்டிய நீதியான சமூகத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் ஒழுக்கமுள்ள நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், இராணுவத்தில் ஒழுக்கமுள்ள அதிகாரியாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவால் மாத்திரமே முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts