கோத்தாவின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கியதில் சிக்கலில்லை

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை உரிய வகையில் முறையாக நீக்கப்பட்டுள்ளது என்று பிவித்துரு ஹெல உருமய (JHU) கட்சியின் தலைவர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலாண்டில் தமது குடியுரிமையை இழப்போர் தொடர்பான பட்டியலை அமெரிக்காவின் உள்நாட்டு வருமான சேவை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற வகையில் இணையத்தில் வெளியிடப்பட்ட குறித்த பட்டியல், நேற்றைய தினம் (15) அதன் இணையத்தளத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இப்பட்டியலில் அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டுள்ள, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் அதில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, உதய கம்மன்பில எம்.பி. இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஹர்ஷ டி சில்வா தனது ட்விற்றர் கணக்கில் கேள்வியெழுப்பிய போது, அது தொடர்பான ஆவணமொன்றை கோத்தாபய ராஜபக்‌ஷ வெளயிட்டிருந்தார் என்பதோடு. அவரது பெயர் அடங்கிய குறித்த பட்டியல் அடுத்த காலாண்டு பட்டியலில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts