இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் கவனம்

இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் எதிர்காலத்தில் மாற்றம் வரலாம் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சூசகமாக உணர்த்தி உள்ளார்.

எதிரிநாடு அணுகுண்டை கையில் எடுக்காத வரையில், இந்தியாவும் முதலில் அணுகுண்டை கையில் எடுக்காது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இதை உறுதியுடன் இந்தியா கடைப்பிடித்தும் வருகிறது. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பது சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும் என கூறினார் ராஜ்நாத் சிங். இது இந்தியாவின் பொறுப்பற்ற தன்மையை கட்டுகிறது என பாகிஸ்தான் விமர்சனம் செய்தது.

இந்நிலையில் இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலக நாடுகள் பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டும் என மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “பாசிச, இந்து இனவெறி ஆதிக்கமான மோடி ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனிக்க வேண்டும், இந்த விவகாரம் இந்தப் பகுதியை மட்டும் தாக்கம் செலுத்துவதல்ல, உலகம் முழுதிற்குமே தாக்கம் ஏற்படுத்தக் கூடியது” எனக் கூறியுள்ளார்.

Related posts