அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி

வைகோ, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் தேசிய அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதனை தொடர்ந்து அவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஓய்வின்றி நிறைய இடங்களுக்கு செல்வதால் வைகோவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வைகோவுக்கு உடல்நல சோர்வு ஏற்பட்டதை அடுத்து இன்று மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உடலில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்வதற்கும், ஆலோசனைகளை பெறுவதற்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி வைகோ ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், 20,21,22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts