தீபாவளிக்குப் போட்டியின்றி ‘பிகில்’?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்துடன் தீபாவளிக்கு எந்தவொரு படமும் வெளியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதில் விஜய் தன் படப்பிடிப்பு பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்த மாதத்துக்குள் அந்தப் பணிகளையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் படம் தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. தீபாவளி என்பதால் போட்டிக்கு வேறு ஏதாவது ஒரு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் 'பட்டாஸ்' மற்றும் 'சங்கத்தமிழன்' ஆகிய படங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இவ்விரண்டு படங்களுமே பின்வாங்கியதாகத் தெரிகிறது. இது குறித்து விசாரித்த போது, "’பிகில்’ படத்தின் தமிழக உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் கைப்பற்றிவிட்டது. தற்போது ஏரியா உரிமைகளின் விற்பனையைத் தொடங்கிவிட்டது.…

திருமணம் செய்ய மாட்டேன் வரலட்சுமி திடீர் முடிவு

நடிகைகளில் சிலர் திருமணம் செய்யாமல் வாழ்க்கை அமைத்துக்கொள்வதை பேஷனாக்கி வருகிறார்கள். ஏற்கனவே நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஓவியா திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று அறிவித்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது வரலட்சுமியும் இடம் பிடித்திருக்கிறார். விமல், வரலட்சுமி ஜோடியாக நடிக்கும் படம் கன்னிராசி. ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். இதில் நடித்ததுபற்றி வரலட்சுமி கூறும்போது தனது திருமண முடிவு பற்றியும் திடீரென அறிவித்து அதிர்ச்சி தந்தார். அவர் கூறியதாவது: புதிய இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். கன்னிராசி படத்தின் ஸ்கிரிப்ட் படிக்கும்போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீமும், படமும் எனர்ஜியாக இருந்தது. காதல் திருமணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன்…

அனுஷ்கா – பிரபாஸ் மீண்டும் காதல்?

அனுஷ்காவும், தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவும், தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் டார்லிங், மிர்சி, பாகுபலி ஆகிய 3 தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாகவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் பேசப்பட்டது. இதனை அவர்கள் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. வெளிநாட்டில் வசிக்கும் தொழில் அதிபர் மகளை பிரபாஸ் மணக்க இருக்கிறார் என்றும் கூறினர். பிரபாஸ் நடிப்பில் அதிக பொருட்செலவில் தயாராகி உள்ள சாஹோ படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. அதன்பிறகு பிரபாஸ் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பிரபாசும்,…

மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

துறையூர் அருகே கிணற்றுக்குள் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகினர். திருச்சி அருகே துறையூர் அடுத்த எஸ்.எஸ் பூதூரில் மினி வேன் ஒன்றில் 22 பேர் பயணம் செய்தனர். கோயில் திருவிழாவிற்கு சென்ற போது திடீரென மினி வேனின் டயர் வெடித்து அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த 22 பேரில் குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கு சென்ற போது 100 அடி ஆழ…

இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் கவனம்

இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் எதிர்காலத்தில் மாற்றம் வரலாம் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சூசகமாக உணர்த்தி உள்ளார். எதிரிநாடு அணுகுண்டை கையில் எடுக்காத வரையில், இந்தியாவும் முதலில் அணுகுண்டை கையில் எடுக்காது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இதை உறுதியுடன் இந்தியா கடைப்பிடித்தும் வருகிறது. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பது சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும் என கூறினார் ராஜ்நாத் சிங். இது இந்தியாவின் பொறுப்பற்ற தன்மையை கட்டுகிறது என பாகிஸ்தான் விமர்சனம் செய்தது. இந்நிலையில் இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலக நாடுகள் பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டும் என மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “பாசிச, இந்து இனவெறி ஆதிக்கமான மோடி ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின்…

அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி

வைகோ, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் தேசிய அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதனை தொடர்ந்து அவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஓய்வின்றி நிறைய இடங்களுக்கு செல்வதால் வைகோவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வைகோவுக்கு உடல்நல சோர்வு ஏற்பட்டதை அடுத்து இன்று மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உடலில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்வதற்கும், ஆலோசனைகளை பெறுவதற்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வைகோ ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், 20,21,22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தாவின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கியதில் சிக்கலில்லை

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை உரிய வகையில் முறையாக நீக்கப்பட்டுள்ளது என்று பிவித்துரு ஹெல உருமய (JHU) கட்சியின் தலைவர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலாண்டில் தமது குடியுரிமையை இழப்போர் தொடர்பான பட்டியலை அமெரிக்காவின் உள்நாட்டு வருமான சேவை திணைக்களம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற வகையில் இணையத்தில் வெளியிடப்பட்ட குறித்த பட்டியல், நேற்றைய தினம் (15) அதன் இணையத்தளத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இப்பட்டியலில் அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டுள்ள, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் அதில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே,…

தமிழ் மொழி மூல பீடாதிபதிகள், அதிபர்களுக்கு விண்ணப்பங்கள்

தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கான பீடாதிபதிகள் மற்றும் அதிபர்களுக்கான விண்ணப்பங்களை கல்வியமைச்சு கோரியுள்ளது. இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தரம் 3 வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைந்து தரம் ஒன்றிற்கு பதவியுயர்வு வழங்கப்பட்ட உத்தியோகத்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் மொழி மூலமான கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்குமே இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி கல்வியியற் கல்லூரி பீடாதிபதிகளுக்கான 06 வெற்றிடங்களும் உப பீடாதிபதிகளுக்கான வெற்றிடங்கள் 17 உம், ஆசிரியர் கலாசாலை அதிபர் வெற்றிடங்கள் 03 இற்குமான விண்ணப்பங்களே தற்போது கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா- ஸ்ரீபாத கல்விக் கல்லூரி, யாழ்ப்பாணம், தாழங்குடா, தர்கா நகர் ஆகியவைகளுக்கான பீடாதிபதிகளுக்கும் கோப்பாய், மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை போன்ற ஆசிரியர் கலாசாலைகளின் அதிபர்களுக்குமான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை…

இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் அரசியலில் ஈடுபட முடியாது

இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலங்கையில் வாக்காளராகப் பதியமுடியும். அதற்கு சட்டத்தில் இடமுண்டு. ஆனால், அவர்களால் இங்கு அரசியலிலீடுபட முடியாது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இலங்கை பிரஜையாக இல்லாத எவரும் வாக்காளாராக பதியமுடியாது எனவும் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுணவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷ 2005இல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, இரகசியமாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொண்டமை, இரண்டு இலங்கை கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக வினவிய போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தினகரனுக்குத் தெரிவித்தார். அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கள் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தன்னால் எதுவும் கூற முடியாது என்று தெரிவித்த அவர், வாக்குரிமை தொடர்பில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளும் போது உரிய கவனம் செலுத்தப்படும் என மேலும் தெரிவித்தார். ஒரு…