அக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்

‘பிகில்’ படத்தை முடித்துவிட்டு, அக்டோபரில் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது. தற்போது தன் காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை விஜய் பேசி வருகிறார். இதன் பணிகளை இந்த மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் முழுமையாக ஓய்வெடுத்துவிட்டு, அக்டோபர் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய். அக்டோபர் 4-ம் தேதி படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.வி.கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் புதிய படத்தின் நாயகியாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்பதற்கு ஒரு பெரும் ஆலோசனையே நடந்து வருகிறது.
ஜனவரி 2020-ல் முழுப் படப்பிடிப்பையும் முடித்து, கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

Related posts