அக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்

'பிகில்' படத்தை முடித்துவிட்டு, அக்டோபரில் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது. தற்போது தன் காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை விஜய் பேசி வருகிறார். இதன் பணிகளை இந்த மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் முழுமையாக ஓய்வெடுத்துவிட்டு, அக்டோபர் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'தளபதி 64' படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய். அக்டோபர் 4-ம் தேதி படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.வி.கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் புதிய படத்தின் நாயகியாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை…

‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்

இந்தியன் 2' படத்தில் மிக முக்கியமான ஃப்ளாஷ்பேக் காட்சிகளைப் பிரம்மாண்டமாகப் படமாக்கவுள்ளார் ஷங்கர். படத்தில் சமுத்திரக்கனியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மீண்டும் கமல் - ஷங்கர் இணைப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரிப்பில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு என்பதே தெரியாமல் இருந்தது. தற்போது சுபாஷ்கரன் - ஷங்கர் இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் அனைத்துமே சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தற்போது சித்தார்த் - ரகுல் ப்ரீத் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு. இதனிடையே இந்தப் படத்தில் முக்கியமான ஃப்ளாஷ்பேக் காட்சிகளை வைத்திருக்கிறார் ஷங்கர். இதனைப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கவுள்ளனர். இதில் கமல் இளம் வயது உடையவராக நடிக்கவுள்ளார். இதில் பணிகள் அதிகம் என்பதால் கமலை வைத்துப் படமாக்க…

களமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்

புதிய பட அறிவிப்புகளுக்காகப் பரபரப்பாகப் பணிபுரிந்து வருகிறார் வடிவேலு. ஆனால், அவரை எதிர்க்கத் தயாராகி வருகிறது தயாரிப்பாளர் சங்கம். ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரிடம் கொடுத்தது. படக்குழுவினரோடு ஏற்பட்ட பிரச்சினையால், வடிவேலு நீண்ட நாட்களாக இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. இதில் வடிவேலுவை வைத்து படம் பண்ண வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கான காரணமாக, இயக்குநர் ஷங்கருடனான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் நடிக்கலாம் என்று முடிவுக்கு வந்த வடிவேலு, மீண்டும் சம்பளம் அதிகமாகக் கேட்பதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் செலவழித்த பணத்தை, வடிவேலுவிடம் வாங்கிக் கொள்ள வேண்டும்.…

கோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயளாலர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் கேள்விகளுக்கு முதலில் கோட்டாபய பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் ஒரே தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ என அவரது தரப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார். உள்நாட்டு யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தமது கடுமையான எதிர்ப்பினை பகிர்ந்து கொண்டனர். "கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியிருப்பது இலங்கை…