இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (14) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தம் (அதிகரிப்பு) செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4 இனாலும் சுப்பர் டீசல் ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, ஒட்டோ டீசல் விலை மாறாது எனவும், நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைத் திருத்தம் மாதாந்தம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமானாலும், இம்மாதம் 10 ஆம் திகதி சனிக்கிழமை என்பதாலும், மீதமுள்ள இரண்டு நாட்கள் வார விடுமுறை என்பதாலும், இந்த விவகாரம் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

அந்த வகையில் நிதியமைச்சில் இன்று (13) கூடிய எரிபொருள் விலை சூத்திரக் குழுவினால் குறித்த விலைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) எரிபொருள் விலைகள்

பெற்றோல் Octane 92 – ரூபா 136 இலிருந்து ரூபா 138 ஆக ரூபா 2 இனாலும்
பெற்றோல் Octane 95 – ரூபா 159 இலிருந்து ரூபா 163 ஆக ரூபா 4 இனாலும்
ஒட்டோ டீசல் – ரூபா 104 (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 104 ஆக ரூபா 1 இனாலும்
சுப்பர் டீசல் – ரூபா 131 இலிருந்து ரூபா 134 ஆக ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related posts