8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாராதிபதி

பௌத்த மதகுரு ஒருவர், 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (12.08.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல - மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பௌத்த மதகுரு எனவும் சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதி எனவும் தெரியவருகின்றது. குறித்த மதகுரு, கடந்த எட்டாம் திகதி தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பெயரில் பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கைது செய்யப்பட்ட பௌத்த மதகுருவை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை கைது…

சர்ச்சைக்குரிய குருணாகல் DIG இற்கு இடமாற்றம்

குருணாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் (DIG) கித்சிறி ஜயலத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதேவேளை பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்த பிரதி பொலிஸ் மாஅதிபர் புத்திக சிறிவர்தன குருணாகல் மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மாஅதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கைது தொடர்பாக பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் மீது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிங்கள பௌத்த தாய்மாரை கருத் தரிக்காத வகையில் சத்திரசிகிச்சை செய்ததாக, திவய்ன பத்திரிகையில் வெளியான செய்தியை அடுத்து, இரு தினங்களின் பின்னர் வைத்தியர் ஷாபி கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த செய்தி தொடர்பான தகவல்களை, குருணாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் வழங்கியதாக,…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (14) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தம் (அதிகரிப்பு) செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4 இனாலும் சுப்பர் டீசல் ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, ஒட்டோ டீசல் விலை மாறாது எனவும், நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைத் திருத்தம் மாதாந்தம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமானாலும், இம்மாதம் 10 ஆம் திகதி சனிக்கிழமை என்பதாலும், மீதமுள்ள இரண்டு நாட்கள் வார விடுமுறை என்பதாலும், இந்த விவகாரம் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்திருந்தது. அந்த வகையில் நிதியமைச்சில் இன்று (13) கூடிய எரிபொருள் விலை…

லடாக் எல்லையில் வட்டமிடும் பாகிஸ்தான் போர் விமானங்கள்!

லடாக்கில் தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு சொந்தமான போர் விமானங்கள் வட்டமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. எந்தவிதமான அரசு தொடர்பான உறவுகளும் இனி இருக்காது. இரண்டு நாட்டு தூதரக அதிகாரிகளும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்திய ரேடாரில் இந்த அத்துமீறல் கண்டுபிடிக்கப்பட்டது. லடாக் எல்லையில் எப்போதும் பாகிஸ்தானை விட சீனாதான் அதிகம் அத்துமீறும். ஆனால் இந்தமுறை பாகிஸ்தானின் விமானங்கள் அங்கு அத்துமீறி வருகின்றன. கடந்த வாரம்…

சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்காது : வடிவேலு

பலமான கூட்டணி, பிரம்மாண்ட கதைக்களம், மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் என்று தனது புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிடத் தயாராகி வருகிறார் வடிவேலு. ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள நடிகர் வடிவேலு, அதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள், சமரசங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ‘நெசமாவே இம்சை அரசன்தான்ணே.. அது சம்பந்தமான பஞ்சாயத்து எல்லாம் முடிவுக்கு வந்திருச்சுன்ணே. இனி எந்த சூழ்நிலையிலும் அந்த படத்தை தொடப்போறதில்லை. அதப்பத்தி இனிமே பேசவே வேண்டாம்னு தோணுதுண்ணே’’ என்று கூறும் வடிவேலு, புது உற்சாகத்தோடு திரைக்களத்தில் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகி வருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து.. ‘சினிமாவுல நாம ஒரு விஷயம் செய்தாலும், நம்மளை தேடி வர்ற ஒரு விஷயத்தை தொட்டாலும் அது வழியா, என்னை ரசிக்கிற ஜனங்களுக்கு எவ்ளோ சந்தோஷம்…

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர்கள்

தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. மீண்டும் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன். சாவித்திரி படம்தான் நான் நடித்த முதலும் கடைசியுமான வாழ்க்கை வரலாறு படமாக இருக்கும். சாவித்திரி என்ற மகா நடிகை வேடத்தில் நடித்த பிறகு இன்னொரு வாழ்க்கை படத்தில் நடிப்பது சிறப்பாக இருக்காது. சாவித்திரி வாழ்க்கை படப்பிடிப்பு முடிந்ததும் எதையோ விட்டு போனமாதிரி மனம் உடைந்து அழுது விட்டேன். இந்த சினிமா படப்பிடிப்பில் மனதோடு எல்லோரும் இணைந்து இருந்தோம். நான் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் ரசிகை. இந்தியில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அலியாபட்…

காஷ்மீர் பிரிப்பு: நடிகர் விஜய் சேதுபதி எதிர்ப்பு

நடிகர் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதில் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. அங்கு விஜய் சேதுபதி அளித்த பேட்டி வருமாறு:- “சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்தேன். கமல்ஹாசன் அவ்வை சண்முகியில் பெண் வேடத்தில் வந்து இருக்கிறார். எனவே நான் புதிதாக எதையும் செய்யவில்லை. சினிமாவால்தான் நடிகர்களுக்கு இமேஜ் கிடைக்கிறது. நாம் தொழிலை எப்படி அணுகுகிறோம் என்பது முக்கியம். வெற்றி பெறுமா? பின்னால் பாதிப்பு வருமா? என்று நினைத்து ஒரு வேலையை செய்யவே முடியாது. கடின உழைப்பை தாண்டி ரசனையோடு அணுகினால்தான் சினிமா உங்களுக்கு நெருக்கமாக இருக்கும். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறேன். கலைக்கு மொழி கிடையாது. முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்திலும் நடிக்க உள்ளேன். கிரிக்கெட்டை தாண்டி தனிப்பட்டவர் வாழ்க்கையை அந்த படம்…

கமல்-காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு

இந்தியன்-2 படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஒரு சில காட்சிகள் படமானதும் கமலின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்திவிட்டார். படத்துக்கான பட்ஜெட்டிலும் பிரச்சினை ஏற்பட்டது. அதன்பிறகு கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இதனை மறுத்த படக்குழுவினர் விரைவில் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கும் என்று உறுதிப்படுத்தினர். பின்னர் வெளிநாட்டு கலைஞர்களை வைத்து கமல்ஹாசனின் வயதான தோற்றத்தை மாற்றி புகைப்படம் எடுத்தனர். அந்த தோற்றம் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழுவினர் திருப்தியானார்கள். இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நேற்று தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படத்தை ரகுல்பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகிலேயே இந்தியன்-2 படப்பிடிப்பையும் நடத்துகின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால்…