ஆமிர் கானுடன் இணைகிறார் விஜய் சேதுபதி

பாலிவுட் நடிகjர் ஆமிர் கானுடன் விரைவில் ஒரு திரைப்படத்தில் சேர்ந்து பணியாற்றப் போவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 10-வது இந்திய திரைப்பட விழா 9-ம்தேதி தொடங்கியது. இது வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் 22-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என திரை உலகைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிழ்ச்சியின் இடையே நடிகர் விஜய் சேதுபதி இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், ” நான் நடிகர் ஷாருக் கான், அமிதாப் பச்சனின் மிகத் தீவிரமான ரசிகன். இருவரும் நடித்த ஏராளமான திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.

குறிப்பாக இந்தியில் வந்த ‘பிங்க்’ திரைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்க வந்திருந்த ஷாருக் கானைச் சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

மெல்போர்ன் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானுடன் நடிகர் விஜய் சேதுபதி
நான் நடித்துவரும் ‘சங்கத் தமிழன்’ திரைப்பட படப்படிப்பின்போது, அங்கு பாலிவுட் நடிகர் ஆமிர் கான் வந்தது உண்மைதான். அவர் அங்கு வந்து என்னைச் சந்தித்தார். இருவரும் நீண்டநேரம் பேசினோம்.

விரைவில் இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்ற இருக்கிறோம். திரைப்படத்தின் பெயர், கதை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் ” எனத் தெரிவித்தார்.

விஜய் சேதுபதி நடித்து சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்துக்கு ஐஎப்எப்எம் சார்பில் சார்பில் சிறந்த தமிழ்திரைப்பட நடிகருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது மேலும், இந்திய ‘சினிமாவில் சமத்துவம்’ என்ற கவுர விருதும் வழங்கப்பட்டது.

இந்த திரைப்படத்தை இயக்குநர் தியாகராஜன் குமரராஜா இயக்கினார். மேலும், ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம் ஆகியவற்றுக்கான விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

பிடிஐ

Related posts