ஆமிர் கானுடன் இணைகிறார் விஜய் சேதுபதி

பாலிவுட் நடிகjர் ஆமிர் கானுடன் விரைவில் ஒரு திரைப்படத்தில் சேர்ந்து பணியாற்றப் போவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 10-வது இந்திய திரைப்பட விழா 9-ம்தேதி தொடங்கியது. இது வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் 22-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என திரை உலகைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிழ்ச்சியின் இடையே நடிகர் விஜய் சேதுபதி இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், " நான் நடிகர் ஷாருக் கான், அமிதாப் பச்சனின் மிகத் தீவிரமான ரசிகன். இருவரும் நடித்த ஏராளமான திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக இந்தியில் வந்த 'பிங்க்' திரைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்க வந்திருந்த…

தமிழில் நிராகரித்தபோது உடைந்து போனேன் – வித்யா பாலன்

தமிழில் பல வாய்ப்புகளை நிராகரித்த வித்யா பாலன், கடைசியாக அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவிட்டார். அதுவும் தனது மறைந்த தோழி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பு என்பதால் நடித்திருக்கிறார். இது பற்றி வித்யா பாலன் கூறும்போது, ‘நேர்கொண்ட பார்வை படத்தில் கௌரவ வேடம் என்றாலும் நல்ல டீமுடன் பணியாற்றியது மறக்க முடியாது. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அஜித், ரொம்பவும் எளிமையானவர். இதற்கு முன் கபாலி, காலா படங்களில் ரஜினியுடன் நடிக்க மறுத்ததாக சொல்கிறார்கள். காலா படத்துக்கு என்னிடம் யாரும் பேசியதில்லை. கபாலி வாய்ப்புதான் எனக்கு வந்தது. அந்த சமயத்தில் இந்தி படத்தில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. ஆரம்பத்தில் மாதவனுடன் ரன் படத்தில் நடிக்க என்னைத்தான் கேட்டனர். டெஸ்ட் ஷூட்டிற்கு பிறகு நிராகரிக்கப்பட்டேன். மனசெல்லாம் படத்திலும் அதேபோல் நிராகரிக்கப்பட்டபோது வருத்தப்பட்டேன். இதயமே உடைந்து…

மாநாடு படத்தில் சிம்பு நீக்கம் வெங்கட் பிரபு

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் 'மாநாடு'. நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளிலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவை இந்த படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து 'மாநாடு' படத்தை எடுக்க என்னை தூண்டி, துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு நடிக்கவிருந்த 'மாநாடு' படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது…

கிருஷ்ணன்- அர்ஜூனன் போன்றவர்கள்: ரஜினிகாந்த்

அமித்ஷாவும், மோடியும், கிருஷ்ணன் - அர்ஜூனன் போன்றவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் பணி குறித்த ஆவணப் புத்தகம் ஒன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று வெளியிடப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த புத்தகத்தினை வெளியிடுகிறார். சென்னையில் இருக்கும் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்றார். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:- மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் வெங்கையா நாயுடு. வெங்கையா நாயுடு முற்றிலும் ஆன்மீகவாதி. தப்பித்தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார்" என்றார். காஷ்மீர் விவகாரம் பற்றி பேசிய ரஜினிகாந்த், அமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன் அர்ஜூனனை போன்றவர்கள். யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பது அவர்களுக்கே தெரியும்.…

மஹிந்தவை சந்தித்த அமெரிக்க அதிகாரிகள்

அமெரிக்காவின் மத்திய மற்றும் தென்னாசியாவிற்கான பதில் உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் ஆகியோர் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லதத்தில் வைத்து அவரை சந்தித்துள்ளார். இன்று காலை 11.00 மணியளவிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ---- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தமையினாலேயே நாம் கட்சியிலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனைத் தவிர எமக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் வேறு எவ்வித பிரச்சினையும் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவாட்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் நேற்று விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில்…

கோத்தாவை எதிர்கொள்ளக்கூடிய ஐ.தே.க

அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவை களமிறக்கினால் அவரை எதிர்கொண்டு மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிப்பீடத்தில் அமரக்கூடிய சக்தியை கொண்டிருக்கும் ஒரேநபர் சஜித் பிரேமதாசவே என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழிநுட்ப (அமைச்சரவை அந்தஸ்து அற்ற) அமைச்சரான அஜித் பீ பெரேரா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தேசிய ஜனநாயக கூட்டணியை அமைப்பது தொடர்பான செயற்பாடுகள் எந்த மட்டத்தினை எட்டியுள்ளன? பதில்:- கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அப்பேச்சுக்கள் முன்னேற்றகரமாகவே இருக்கின்றன. ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிடப்படுவதோடு, சஜித் பிரேமதாசவுக்கும், கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு இடையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கூட்டணிக்கான கைச்சாத்து இடம்பெற வேண்டும் என்பது எமது நிலைப்பாடாக உள்ளது. கேள்வி:- இறுதியாக நடைபெற்ற…

கோத்தபாயவிற்கு ஆதரவளிக்க சிறிசேன தீர்மானம்?

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பாக்கப்படுகின்ற கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என கொழும்பின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன பொதுஜனமுன்னணியுடன் இணைந்து கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் சுதந்திரக்கட்சி கோத்தபாய ராஜபக்சவுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடும் என ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவுடன் ஒரு உடன்படிக்கையிலும் பொதுஜனமுன்னணியுடன் மற்றுமொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப்போவதாக சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை மாகாணசபை தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதற்காக நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுவதற்கான முயற்சிகளையும் சிறிசேன ஆரம்பித்துள்ளார். ----- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு எமது தரப்புக்குள் எந்த எதிர்ப்புக்களும் காணப்படவில்லை. அவை அனைத்தும் வெறுமனே அவர் மீதுள்ள அச்சத்தின் காரணத்தால் வெளியிடப்படும் புனை கதைகளேயாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திரன முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர்…

கோத்தாபாய ராஜபக்ஷவை தமிழ் மக்கள் ஏற்கமாட்டார்கள்

கோத்தாபாய ராஜபக்ஷ தமிழ் மக்களை பாதிக்ககூடிய மிகவும் கசப்பான உணர்வுகளை எமது மனங்களில் விதைத்துள்ளார் தமிழ் மக்கள் அவரை ஏற்கமாட்டார்கள் என என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். இன்று (11) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தென் இலங்கையில் இருந்து வரும் தலைவர்களைப் பொறுத்தவரை அவர்கள் அடிப்படைவாத சிந்தனையில் மூழ்கியுள்ளனர். பேரினவாத பிடிக்குள் இறுகியுள்ளனர். பேரினவாதத்தை மட்டும் கையில் வைத்து ஆட்சி செய்பவர்கள் அப்படி இல்லாமல் முற்போக்கு சிந்தனையுடன் சிறுபான்மை மக்களும் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இதனால் அறவழி போராட்டங்களும் ஆயுத போராட்டங்களும் நடைபெற்றன. அவற்றின் தீர்வை போரினால் மட்டும் காண முடியாது. மாறாக ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை முலமாக நிரந்தரமான…