வல்வெட்டித்துறையில் ஆழிக்குமரன் நீச்சல் தடாகத்தை திறந்துவைத்து அமைச்சர் மங்கள சமரவீர

காங்கேசன்துறை துறைமுகம் 45 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள நிலையில் இந்து சமுத்திரத்தில் இது இந்தியாவுக்கான நுழைவாயிலாக இருக்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். கொழும்பு துறைமுகம் காரணமாக கொழும்பு நகரும், கட்டுநாயக்க விமான நிலையம் காரணமாக கம்பாஹா மாவட்டமும் முன்னேறியதைப் போலவே இந்த இணைப்பு நடவடிக்கைகள் வடக்குக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகைதந்த அமைச்சர் மங்கள சமரவீர வல்வெட்டித்துறையில் 10 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஆழிக்குமரன் நினைவு நீச்சல் தடாகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பொருளாதாரத்தில் இந்தியா துரித வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவுடன் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்திகொள்ள வேண்டும். இந்திய உதவியுடன் பாலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுகிறது. 45 மில்லியன் ரூபா…

ஜனாதிபதித் தேர்தலில் ததேகூ ஆதரவு யாருக்கு – சுமந்திரன் விளக்கம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் யார் என்பதை அறிவித்த பின்னர், அந்த வேட்பாளர்கள் தங்கள் கொள்கை என்ன என்பதை வெளிப்படுத்தினால், அந்த வேட்பாளர்கள் அனைவரையும் சந்தித்து உரையாடிய பின்னரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை அறிவிக்கும் என அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த சுமந்திரனிடம், ஜனாதிபதித் தேர்தல் குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியும் தங்கள் வேட்பாளரை இன்னமும் அறிவிக்கவில்லை. ஆக வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பிலும் அந்த வேட்பாளர்களின் கொள்கை என்ன என்பது தொடர்பிலும் இதுவரையில் அறிவிக்கப்படாதவிடத்து நாங்கள் எப்படி அது…

நடிகை விஜயலட்சுமிக்கு உதவிய ரஜினிகாந்த்

என்னுடைய கஷ்டங்களை கேட்டு ரஜினிகாந்த் எனக்கு உதவி செய்தார் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார். விஜய், சூர்யாவுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் விஜயலட்சுமி. கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணியாக வந்தார். கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பண கஷ்டத்தில் இருப்பதாகவும் ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்கிறேன் என்றும் பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டார். ரஜினிகாந்த் எனக்கு உதவ வேண்டும் என்றும் வீடியோவில் கூறியிருந்தார். இப்போது இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் விஜயலட்சுமி பேசி இருப்பதாவது:- “வீடியோவில் எனது கஷ்டங்களை பகிர்ந்து ரஜினியிடம் ஒரு முறை பேச வேண்டும் என்று கூறினேன். இதை பார்த்து ரஜினிகாந்த் என்னை போனில் தொடர்பு கொண்டார். எனக்கு இன்ப…

சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷிற்கு

சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷிற்கு’ வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷிற்கு’ வழங்கப்பட்டுள்ளது. 2018 - 66 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன அதன் விவரம் வருமாறு: * சிறந்த தமிழ் படம் பிரியா கிருஷ்ண மூர்த்தி இயக்கிய பாரம் * சிறந்த தெலுங்கு படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி தேர்வு * சர்ஜிக்கல் தாக்குதலை மையமாக வைத்து எடுத்த உரி படத்திற்கு சிறந்த பின்னணி இசையமைப்பிற்கான விருது * சிறந்த இந்தி படமாக ஸ்ரீராம் ராகவன் இயக்கிய அந்தாதூன் தேர்ந்து எடுக்கப்பட்டது. * பத்மாவத் திரைப்படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது. *…