அலைகள் வாராந்த பழமொழிகள் 04.08.2019

01. ஓர் எதிர்மறை எண்ணத்தை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதன் மூலம் அதை வளரவிட்டால் அது ஓர் உண்மையான மன அரக்கனாக வளரும். அது நம்முடைய கனவுகளை சிதைத்து தீவிர உளவியல் சிக்கல்களுக்குள் தள்ளிவிடும். 02. கடந்த காலத்தில் இருட்டை மட்டுமே பார்த்திருந்தால் நிகழ் காலத்திலும் அதையே காண்பீர்கள். இதனால் வாழ்க்கை முழுவதும் அவ நம்பிக்கையே தொடரும். 03. உங்களுடைய மனம் ஒரு வங்கியை போன்றது, அது எதிர்மறையான எண்ணங்களை எண்ணத் தொடங்கினால் ஆபத்தில் மாட்டிவிடும். ஆகவே அதை தவிர்த்துக் கொள்ளுங்கள். 04. ஒருவருக்கு உளவியல் பிரச்சனை இருந்தால் எதிர் மறையான எண்ணங்களை நிறுத்தி நேர்மறையான எண்ணங்களை எண்ணினால் சுகமடைய முடியும். 05. உங்கள் மன வங்கியில் இருந்து இனிமையற்ற எண்ணங்களை நினைவுகூருவதை நிறுத்திவிடுங்கள். 06. எதை மனதின் வழி பார்த்தாலும் மோசமான பக்கங்களை பார்க்க வேண்டாம். நேர்மறையாக…