முதல் காட்சி ரத்து: பைனான்ஸ் சிக்கலில் ஆடை

அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடை’ திரைப்படம் பைனான்ஸ் சிக்கலில் இருப்பதால், திட்டமிட்டப்படி வெளியாகவில்லை.

‘மேயாத மான்’ படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ‘ஆடை’. நாயகியை மையப்படுத்திய இந்தக் கதையில், பிரதான பாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார். வி.ஜே.ரம்யா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் இன்று (ஜுலை 19) வெளியாகவிருந்தது.

ஆனால், படத்துக்கு வாங்கப்பட்ட பைனான்ஸில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் க்யூப் நிறுவனத்திலிருந்து எந்தவொரு திரையரங்கிற்கு அதன் பாஸ்வோர்ட் அனுப்பப்படவில்லை. பல திரையரங்குகள் படங்கள் வெளியாகாததால், ஏமாற்றத்துடன் ரசிகர்கள் திரும்பியுள்ளனர்.

விரைவில், பிரச்சினைகளைத் தீர்த்து மாலைக்குள் வெளிக்கொண்டுவர பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் படங்கள் வெளியாகும் இறுதி நேரத்தில், பைனான்ஸ் சிக்கல் ஏற்பட்டு, வெளியீடு தாமதாவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

Related posts