கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் பங்­கேற்­காமை கவ­லை

வடக்கு, கிழக்கில் திட்­ட­மிட்­ட­வ­கையில் பௌத்த ஆக்­கி­ர ­மிப்பு இடம்­பெற்று வரும் இந்த வேளையில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் தமிழ் தேசி­யக்கூட்.டமைப்பு எம்.பி.க்கள் கலந்­து­கொள்­ளாமை கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மாகும் என்று மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ். வியா­ழேந்­திரன் தெரி­வித்தார்.

கன்­னியா வென்­னீ­ரூற்று பிள்­ளையார் ஆலய விவ­காரம் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான எம்.பி.க்கள் சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். நேற்று முற்­பகல் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்ட வியா­ழேந்­திரன் எம்.பி. சந்­திப்பை அடுத்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்து. தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

இந்த முக்­கிய சந்­திப்பில் கலந்­து­கொள்­ளு­மாறு சகல தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்­தி­ருந்தார். வடக்கு, கிழக்கில் திட்­ட­மிட்­ட­வ­கையில் பௌத்த ஆக்­கி­ர­மிப்பு இடம்­பெற்று வரு­கின்­றது. இந்த நிலையில் அவற்றை தடுத்து நிறுத்­த­வேண்­டி­யுள்­ளது. இத்­த­கைய முக்­கிய சந்­திப்பில் தமிழ் கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் எவரும் பங்­கேற்­க­வில்லை.

தமிழ் மக்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட பிரச்­சினை குறித்து கலந்­து­ரை­யாடும் போது அவர்கள் இதில் பங்­கேற்­க­வில்லை. திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக உள்ள கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் துரை­ரட்­ண­சிங்கம் ஆகியோர் கூட இந்­தக்­கூட்­டத்தில் பங்­கேற்­காமை கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மாகும்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவர்­க­ளது மக்­க­ளுக்கு பிரச்­சினை ஏற்­படும் போது சக­லரும் ஒன்­று­கூடி நிற்­கின்­றனர். கட்சி பேதங்­களை மறந்து ஒன்­றாக கைகோர்த்து நிற்­கின்­றனர். ஆனால் தமிழ் எம்.பி.க்களைப் பொறுத்­த­வ­ரையில் அவ்­வா­றான நிலை இல்லை. கூட்­ட­மைப்பின் எம்.பி.க்கள் இந்த சந்திப்பில் பங்கேற்காமை கவலைக்குரிய விடயமாகும்.

இந்த விடயத்தில் அமைச்சர் மனோகணேசன் இந்து கலாசார அமைச்சராக உரிய பணிகளை மேற்கொண்டிருக்கின்றார். அவரது செயற்பாடு பாராட்டத்தக்கதாகும்.

Related posts