கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை

அவுஸ்ரேலியா குறைந்த செலவிலான ஜெட்ஸ்டார் விமான சேவையை விரைவில் இலங்கைக்கான விமான நடவடிக்கையாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது அவுஸ்ரேலியாவின் கொண்டாஸ் விமான சேவைக்கு உட்பட்டதாகும்.

இதன் கீழ் கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த ஜுன் மாதத்தில் அவுஸ்ரேலியா மெல்பனில் இருந்து சுமார் 4000 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இதன் காரணமாக பெரும்பாலானோரின் கோரிக்கைக்கு அமைய விமான சேவை ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை மாலைத்தீவுக்கான அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொலி தெரிவித்துள்ளார்.

Related posts