இம்சை அரசன்-2 படத்தில் வடிவேல் நடிப்பாரா?

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து வடிவேலு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்புதேவன் இயக்கத்திலும், ஷங்கர் தயாரிப்பிலும் வடிவேல் நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் 2006-ல் வெளியாகி வெற்றி பெற்றதால், அதன் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கினர். படப்பிடிப்பில் வடிவேல் சில நாட்கள் பங்கேற்று நடித்த நிலையில் சிம்புதேவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்தில் இருந்து விலகினார். இதனால் தனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றும், வடிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். நடிகர் சங்கம் வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பி படத்தில் நடிக்கும்படி வற்புறுத்தியது. அதை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம்…

2 படங்கள் ரிலீஸ்காஜல் அகர்வால் மகிழ்ச்சி

ஒரே நாளில் 2 படங்கள் வெளியாவது இரட்டை சந்தோஷத்தை அளித்துள்ளது என்று டுவிட்டரில் காஜல் அகர்வால் தெரிவித்து உள்ளார். முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு தற்போது தமிழில் கோமாளி, பாரிஸ் பாரிஸ், இந்தியன்-2 ஆகிய 3 படங்களும், தெலுங்கில் ‘ரணரங்கம்’ என்ற படமும் கைவசம் உள்ளன. இவற்றில் கோமாளி படம் முடிந்துள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். அதே நாளில் ரணரங்கம் தெலுங்கு படமும் வெளியாகிறது. இதில் சர்வானந்த், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். சுதீர்வர்மா இயக்கி உள்ளார். அதிரடி திகில் படமாக தயாராகி உள்ளது. ஒரே நாளில் 2 படங்கள் வெளியாவது இரட்டை சந்தோஷத்தை அளித்துள்ளது என்று டுவிட்டரில் காஜல்…

‘பிகில்’ படத்தின்பாடல் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி

பிகில் படத்தின் சிங்க பெண்ணே என்று தொடங்கும் பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்கார் படத்துக்கு பிறகு விஜய் பிகில் படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. அடுத்தமாதம் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஜய் தந்தை, மகன் என்று இருவேடங்களில் வருகிறார். சமீபத்தில் அவரது தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. மகன் விஜய் மைக்கேல் என்ற பெயரில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் அதிக பொருட்செலவில் கால்பந்து மைதான அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கி உள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் விஜய் ஒரு பாடலை பாடி உள்ளார். இந்த பாடலை…

இளைஞர் ஒருவரை காதலிப்பதாக நடிகை அமலாபால் கூறியுள்ளார்

அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் 2014-ல் காதலித்து திருமணம் செய்து 2017-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமீபத்தில் விஜய்க்கு 2-வது திருமணம் நடந்தது. மணமக்களுக்கு அமலாபால் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனக்கும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த நிலையில் இளைஞர் ஒருவரை காதலிப்பதாக அமலாபால் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- “நான் ஒருவருடன் காதல் உறவில் இருக்கிறேன். என் வாழ்க்கையில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அவர்தான் காரணம். ஒரு தாயால் மட்டுமே நிபந்தனையற்ற அன்பை கொடுக்க முடியும் என்றும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய முடியும் என்றும் எண்ணி இருந்தேன். ஆனால் தன்னாலும் அதை தர முடியும் என்று அவர் நிரூபித்து இருக்கிறார். சினிமா மீது எனக்கு இருக்கும் ஈடுபாடுகள் அவருக்கு நன்றாகவே தெரியும். என்னை எப்போதும் அவர் பாராட்டுவது…

கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை

அவுஸ்ரேலியா குறைந்த செலவிலான ஜெட்ஸ்டார் விமான சேவையை விரைவில் இலங்கைக்கான விமான நடவடிக்கையாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இது அவுஸ்ரேலியாவின் கொண்டாஸ் விமான சேவைக்கு உட்பட்டதாகும். இதன் கீழ் கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த ஜுன் மாதத்தில் அவுஸ்ரேலியா மெல்பனில் இருந்து சுமார் 4000 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இதன் காரணமாக பெரும்பாலானோரின் கோரிக்கைக்கு அமைய விமான சேவை ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை மாலைத்தீவுக்கான அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொலி தெரிவித்துள்ளார்.