நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ல் வெளியீடு

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் தயாராகியுள்ளது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. இதில் பிரச்சினையில் சிக்கும் 3 இளம்பெண்களை காப்பாற்றும் வக்கீல் வேடத்தில் அஜித்குமார் வருகிறார்.

அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். சதுரங்க வேட்டை படத்தை எடுத்து பிரபலமான வினோத் இயக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இந்த படத்தை முடித்து விட்டு மீண்டும் போனிகபூர் தயாரிக்கும் இன்னொரு படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அஜித்குமார் கோர்ட்டில் வக்கீலாக வாதாடுவதுபோல் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன. இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts