உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி 'டை'யில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் இங்கிலாந்து அணி வீரர் பட்ளர் மற்றும் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்தனர். இருவரும் இணைந்து 15 ரன்கள் எடுத்தனர். மேலும் சூப்பர் ஒவரில் 16 ரன்களை வெற்றி இழக்காக இங்கிலாந்து அணி நிர்ணயத்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி வீரர் கப்டில் மற்றும் நீஸ்சாம் களமிறங்கி 7 பந்துகளில் 15 ரன்களே எடுக்க முடிந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மேலும் முதன்முதலில் உலகப்கோப்பை வென்றது இங்கிலாந்து அணி சாதனை படைத்தது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணி மோதியது. இந்த இறுப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற…

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.டி.லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்றத்தினர் களம் இறங்கி உள்ளனரே?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கே.எஸ்.அழகிரி பதிலளித்து கூறியதாவது:– ரஜினிகாந்த் ரசிகர்கள் வேலூருக்கு செல்லட்டும். அங்கு திரையரங்குகள் அதிகம் இருக்கின்றன. ரஜினிகாந்த் படத்தை திரையிட்டு அவர்கள் பார்க்கட்டும். வேலூர் தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர்களால் ஒன்றும் நடந்து விட போவதில்லை. சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை…

கவர்ச்சி விருந்து படைக்கும் ஸ்ரேயா

ரஜினி, விஜய் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட ஸ்ரேயா கைவசம் படங்கள் எதுவும் இல்லாமல் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார். பாய்பிரண்ட் ஆன்ட்ரி கொஸ்சேவ்வை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே நடிக்க ஒப்புக்கொண்ட, ‘நரகாசூரன்’ படம் இன்னமும் திரைக்கு வராமல் இருப்பதால் நொந்துபோய் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு ஒப்புக்கொண்ட, ‘சண்டக்காரி’ படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. முன்னணி நடிகை பட்டியலில் இடம்பிடித்திருந்த ஸ்ரேயா திடீரென்று தனது மார்க்கெட்டை இழந்து பின்னுக்கு தள்ளப்பட்டதால் நொந்துபோயிருக்கிறார். விட்ட இடத்தை பிடிப்பதற்காக போராடி வரும் அவர் இணைய தள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை சரமாரியாக வெளியிட்டு கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறார். திருமணம் ஆகி வருடக்கணக்காகிவிட்டதால் அவர் கர்ப்பமாகியிருப்பார் என்ற சந்தேகமும் பலருக்கு எழுவதால் தான் இன்னும் தாய்மைக்கு தயார் ஆகவில்லை, இன்னமும் ஹீரோயினுக்கு ஏற்ற தோற்றத்துடன் கட்டுக்கோப்பாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தவே அவ்வப்போது…

ராஜகோபால் உடல் நிலை கவலைக்கிடம்

சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணா பவன் உரிமையாளர் ராஜகோபால் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ராஜகோபால் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்போது அவருக்கு ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து ராஜகோபால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்போது அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இந்த நிலையில் ராஜகோபால் கடந்த 7-ந்தேதிக்குள் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் தனக்கு நரம்பு…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி9.10மணியளவில் உணரப்பட்டுள்ளது. வடக்கு மலுகு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.