பாஜகவில் இணைகிறாரா தோனி ?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் என்று அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த பின்னர், மோடியின் குழுவில் தோனி இணைவார் என்று அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டி அளித்த சஞ்சய் பஸ்வான் தனது நண்பரான தோனியை கட்சியில் இணைப்பது குறித்து பல நாட்களாக பேசி வருவதாக கூறியுள்ளார்.

தோனியின் சொந்த மாநிலமான ராஞ்சியில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது முதல்வர் வேட்பாளராக தோனியை பாஜக முன்னிறுத்தும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தோனி கட்சியில் இணைவதன் மூலம் இளைஞர்களின் வாக்குகள் கிடைக்கும் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பு ஆகும். பாஜகவின் இந்த வியூகம் எதிர்க்கட்சிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 2019ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் பிரச்சார பயணத்தின் போது பாஜக தலைவர் அமித்ஷா தோனியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசியலில் சேருவது குறித்து தோனி தரப்பில் எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Related posts