அலைகள் வாராந்த பழமொழிகள் 12.07.2019

01. பயம் உண்மையானதுதான் ஆனால் அது நம்மை ஆட்கொள்வதற்கு முன்பதாக அது நம்முள் இருப்பதை நாமே உணர்ந்து கொள்ள வேண்டும்.

02. கவலை, பதற்றம், பீதி எல்லாமே எதிர்மறையாக கையாளப்படுகின்ற பயம் கலந்த கற்பனையில் இருந்துதான் உருவெடுத்து வருகின்றன.

03. வெற்றியின் முதல் எதிரி பயம்தான் ஓர் அரிய வாய்பபை பெறுவதில் இருந்து ஒருவரை அது தடுத்துவிடுகிறது.

04. நீங்கள் பேச விரும்பும் போது உங்களை பேச விடாது தடுப்பதும், உங்கள் வாழ்நாளை குறைப்பதும் இந்தப் பயம்தான்.

05. இலட்சக்கணக்கான மனிதர் ஏன் குறைவாகவே சம்பாதிக்கின்றனர் என்றால் காரணம் பயம்தான், அதுபோல வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாமல் தவிக்கவும் பயமே காரணமாகும்.

06. பயம் பல்வேறு வடிவங்களில் இருக்கிறது.. அது ஒருவகை நோய் தொற்று என்றும் கூறலாம்.

07. உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்துவது போல பயம் என்னும் நோயையும் நம்மால் குணப்படுத்த முடியும்.

08. பிறக்கும்போதே யாரும் தன்னம்பிக்கையுடன் பிறப்பதில்லை.. அதை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மை சுற்றியுள்ள வெற்றியாளர் அனைவரும் தாமாக தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டவர்களே.

09. ஆழமான கடலில் ஒரு தடவை குதிக்காதவரை பயம் என்பது மறையப்போவதில்லை.. அது போலத்ததான் பயத்தையும் துணிந்து செயற்படுவதன் மூலம்தான் வென்றாக வேண்டும்.

10. தயக்கம், தள்ளிப்போடுதல் இரண்டும் பயத்தை அதிகரிக்கின்றன. துணிந்த செயல் நடவடிக்கையே பயத்தை வெல்ல உதவுகிறது.

11. நம்பிக்கை கொண்டால் மட்டும் போதாது அதற்கேற்ப செயற்படவும் வேண்டும். வெறுமனே நம்பிக்கை கனவுகளில் மட்டும் மிதந்து என்ன பயன்..?

12. கப்பல் மூழ்குவது போல நினைவுகளில் குதித்து கவலையாக இருப்பது பலரது இயல்பு. நீங்கள் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் நம்பும்படியாக வாழ்ந்து காட்ட துணிச்சல் அவசியம்.

13. ஒரு வேலையில் இருக்கும்போது இன்னொரு வேலை தேடுவது நல்லது. வேலை இல்லாதபோது வேலை தேடுவதைவிட அது பத்துமடங்கு இலகுவானது.

14. நாம் கடினமான பிரச்சனையை எதிர் கொள்ளும்போது, அது குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்காதவரை துயரமான புதை குழியில்தான் சிக்கிக்கிடப்போம். ஆகவே அதிலிருந்துவிடுபடுவதானால் செயல் நடவடிக்கை மிகமிக அவசியமாகும்.

15. நீங்கள் ஒரு மதிப்பான காரியத்தை செய்கிறீர்கள் என்றால் அது குறித்து மற்றவர்கள் உங்களை விமர்சிப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

16. வாடிக்கையாளரை இழந்துவிடுவோம் என்று பயப்பட வேண்டாம் சிறந்த சேவையை வழங்குவதன் மூலமாக அதாவது இரண்டு மடங்கு அதிகமாக உழைத்து அவர்களை தக்க வைக்க முடியும்.

17. கவலைப்பட செலவிடும் நேரத்தை படிப்பதற்கு பயன்படுத்துங்கள். எல்லா காரணிகளையும் ஆய்வு செய்யுங்கள் பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்த திடமான மனத்துடன் நடவடிக்கைகளை எடுங்கள்.

18. உங்கள் பயத்தை தனியே பிரித்தெடுங்கள், எது குறித்து நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று கண்டு பிடியுங்கள். பிறகு பொருத்தமான நடவடிக்கை எடுங்கள். எந்த பயத்திற்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கத்தான் செய்யும்.

19. தயக்கம் உங்கள் பயத்தை பெருக்கும். எனவே துரிதமாக நடவடிக்கை எடுங்கள். தீர்மானம் எடுப்பதில் உறுதியாக இருங்கள் காலம் தாழ்த்த வேண்டாம்.

20. பெரும்பாலும் சரியாக கையாளப்படாத நினைவுகள்தான் நம்பிக்கை வரட்சிக்குக் காரணமாகிறது.

21. மனம் ஒரு வங்கியை போன்றது. நீங்கள் வரட்சியான முன் உதாரணங்களை கேட்டால் அதை அள்ளி வழங்கும், வெற்றி எண்ணங்களை கேட்டால் அதையும் வழங்கும். கேட்பதை சரியாகக் கேட்க வேண்டும்.

22. இரவில் படுக்கப்போகும்போது கூட இனிமையான நினைவுகளுடனேயே படுங்கள். மனதிற்குள் குறை கூறியபடி படுக்க போக வேண்டாம்.’

23. உங்கள் நினைவு வங்கியில் நேர்மஙைறயான எண்ணங்களை மட்டுமே சேமித்து வையுங்கள். வெற்றியாளர் எப்போதுமே நேர்மறை எண்ணங்களை நினைவு வங்கியில் சேமித்து வைப்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

24. ஒரு காரின் பெற்றோல் தாங்கிக்குள் தினசரி ஒரு பிடி மண்ணை அள்ளிப் போட்டால் என்ன நடக்கும் அது போலத்தான் மனதிற்குள்ளும் நம்பிக்கை இல்லாத எண்ணங்களை மண்ணள்ளி போட்டது போல போட வேண்டாம்.

25. எதிர்மறை எண்ணங்கள் மனதில் பயங்கரமான அரக்கனாக வளர முன்னர் அதை அழித்துவிடுங்கள்.

அலைகள் பழமொழிகள் தொடர்ந்தும் வரும்.

அலைகள் 12.07.2019

Related posts