அலைகள் வாராந்த பழமொழிகள் 12.07.2019

01. பயம் உண்மையானதுதான் ஆனால் அது நம்மை ஆட்கொள்வதற்கு முன்பதாக அது நம்முள் இருப்பதை நாமே உணர்ந்து கொள்ள வேண்டும். 02. கவலை, பதற்றம், பீதி எல்லாமே எதிர்மறையாக கையாளப்படுகின்ற பயம் கலந்த கற்பனையில் இருந்துதான் உருவெடுத்து வருகின்றன. 03. வெற்றியின் முதல் எதிரி பயம்தான் ஓர் அரிய வாய்பபை பெறுவதில் இருந்து ஒருவரை அது தடுத்துவிடுகிறது. 04. நீங்கள் பேச விரும்பும் போது உங்களை பேச விடாது தடுப்பதும், உங்கள் வாழ்நாளை குறைப்பதும் இந்தப் பயம்தான். 05. இலட்சக்கணக்கான மனிதர் ஏன் குறைவாகவே சம்பாதிக்கின்றனர் என்றால் காரணம் பயம்தான், அதுபோல வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாமல் தவிக்கவும் பயமே காரணமாகும். 06. பயம் பல்வேறு வடிவங்களில் இருக்கிறது.. அது ஒருவகை நோய் தொற்று என்றும் கூறலாம். 07. உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்துவது போல பயம்…

நான் ஒரு தமிழ் பெண் என்பதால் துன்புறுத்துகிறார்கள் – நடிகை

நான் ஒரு தமிழ் பெண் என்பதால் இங்கு என்னை துன்புறுத்துகிறார்கள் என்று நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் கன்னட நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழ் பெண் என்றாலும், தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கன்னட சினிமாவிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் தமிழாவுக்கு தாயாக நடித்திருந்தார். இந்நிலையில், அவர் தற்போதையநிலை குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதில் அவர் பேசியிருப்பது. “நான் நடிகை விஜயலட்சுமி. பிரெண்ட்ஸ் படத்தில் நடித்திருப்பேன். பெங்களூருவில் இருந்து இந்த வீடியோவை வெளியிடுகிறேன். ஆறு மாதங்களுக்கு முன்பு கொஞ்சம் சீரியஸாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். தமிழில் சினிமா வாய்ப்புகள்…

தீபாவளிக்கு விஜய் – விஜய் சேதுபதி படங்கள் மோதல்

பண்டிகை காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களை ஒதுக்குவது இல்லை. கடந்த பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த 2 படங்களுமே நல்ல வசூல் பார்த்தது. வருகிற தீபாவளிக்கு விஜய் நடிக்கும் பிகில் படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்த மாதமே (ஆகஸ்டு) திரைக்கு கொண்டு வருகிறார்கள். இதனால் விஜய் படத்துக்கு போட்டியாக எந்த படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். பிகில் படத்தில் விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் நடித்துள்ளார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார்.…

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல !?

கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் போலீசுக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் போலீசுக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். அவருடன் தனக்கு இருந்த அனுபவம் குறித்து கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள அதிர்ச்சிகரமான தகவல் வருமாறு:– நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் உள்ள மர்மத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் எனது நண்பர் டாக்டர் உமாதாதனிடம் அதுபற்றி கேட்டேன். பல்வேறு சூழ்நிலை ஆதாரங்கள் நடிகை ஸ்ரீதேவி மரணம் விபத்து அல்ல என்பதை நிரூபிப்பதாக உள்ளன. அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தாலும், குளியல் தொட்டியில் உள்ள ஒரு…

இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்..! சுப்பிரமணியன் சுவாமி..!

உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. இதனால் கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வேதனை அடைந்தனர். தோல்விக்கான காரணங்களை ஓவ்வொருவரும் ஓவ்வொரு விதமாக கூறி வருகின்றனர். உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பிரித்தானியர்களின் சூழ்ச்சியே காரணம் என்பதை குறிப்பிடும் வகையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கூறி இருப்பதாவது:- கிரிக்கெட்டுக்கான ஐ.சி.சி ஏன் லண்டனில் இருக்க வேண்டும்? வெள்ளைக்காரர், கடினமான சீனிவாசனை நீக்கிவிட்டு, எலும்பில்லாத அதிசய இந்தியரை தலைவர் பதவியில் அமர்த்தி உள்ளார். பிரித்தானியாவில் மழைக்கான எச்சரிக்கை…

விடுதலைப் புலிகளின் தங்க புதையலை தேடி ஏமாற்றம்..!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப் புலிகளால் நகைகள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தனியார் வீடு ஒன்றில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை ஒன்று நேற்று (11) இடம்பெற்றுள்ளது. இறுதி போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் அந்த இடத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியே இந்த அகழ்வு நடவடிக்கை ச. தம்பிராசா என்பரின் காணிக்குள் வீட்டிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் கடந்த 27 ஆம் திகதி முதல் பொலிஸாரின் பாதுகாப்பு போடப்பட்டு வந்த நிலையில் நேற்று தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேர் அடங்கிய குழு ஒன்றினை பொலிஸார் கைது செய்திருந்தனர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை மையமாக வைத்து குறித்த…