இரா செங்கதிரின் சுரலயம் இசைப்பள்ளி தாகம் இசைப்பேழை வெளியீடு !

இரா செங்கதிரின் சுரலயம் இசைப்பள்ளியினால், இரா செங்கதிரின் இசையில் வரிகளில் பன்னிரண்டு பாடல்கள் அடங்கிய, தாகம் இசைப்பேழை, பாடல் புத்தகம், கரோக்கிகள் சுவிஸ்லாந்தில் வெளியீடு செய்யப்பட்டது.

மதகுருமார்கள், தமிழ்பள்ளி அதிபர்கள்,ஆசிரியர்கள், போராளிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என 300 வரையான மக்கள் இந்த வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்தமை வெளியீட்டு விழாக்களில் கண்ட தாகம் வெளியீட்டு விழாவின் சிறப்பாகும்.

உலகம் பூராக ஒண்லைன் மூலமாகவும், நேரடியாகவும் இரா செங்கதிரின் சுரலயம்
இசைப்பள்ளி நடைபெறுகிறது. இப்பள்ளியில் மூன்று தலைமுறைப்பாடகர்கள்குரல் பயிற்சி, இசைக்குழு பயிற்சி, பாடும் திறன் பயிற்சிகள் பெற்றுவருகின்றனர்.

இவர்களில் பலர் இந்த இசைப்பேழையில் பாடல்களை பாடியுள்ளனர்.தாயகப்பாடல்களின் இன்னொரு பரிணாமமாக எமது வலிகளை வேற்றினமக்களுக்கு அவர்களது மொழிகலந்து
இப்படல் இசைப்பேழை வருவது சிறப்பம்சம்.

விழாவின் தொகுப்பு முல்லை மோகன் அவர்கள் வரவேற்புரை தேன்மொழி கலைச்செல்வன்.
வெளியீட்டுஉரை : ஆன்மீகப்பேச்சாளர் கி,த,கவிமாமணி ஜேர்மன்வாழ்த்து உரை பேண் ஞானலிங்கேஸ்வரா பிரதம சசி ஐயா அவர்கள்.

ஆசியுரை சரகணபவானந்தன் குருக்கள் மதிப்பீட்டு உரை சமூக ஆர்வலர் முன்னாள் போராளி ப.சங்கர் அவர்கள். மதிப்பீட்டு உரை ஊடகவியலாளர் கனகரவி அவர்கள்.

தாகம் இசைப்பேழையில் பாடிய 3 ம் தலைமுறை பாடகர், பாடகிகள் பாடல்களை இசைத்தனர் இசைப்பேழையில் இரண்டு பாடல்களுக்கு நடனங்கள் மதிவதனி நடன ஆசிரியையின் மாணவிகள்

பதில் உரை நன்றி உரை இரா செங்கதிர்

கலைஞர் மதிப்பளிப்பு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று இருந்தது.ரா செங்கதிர் வெளியிட்டு வைக்க தமிழ் பள்ளி அதிபர் வத்சலா கனகசபை அவர்கள் பெற்றுக்கொண்டார்.

Related posts