இரா செங்கதிரின் சுரலயம் இசைப்பள்ளி தாகம் இசைப்பேழை வெளியீடு !

இரா செங்கதிரின் சுரலயம் இசைப்பள்ளியினால், இரா செங்கதிரின் இசையில் வரிகளில் பன்னிரண்டு பாடல்கள் அடங்கிய, தாகம் இசைப்பேழை, பாடல் புத்தகம், கரோக்கிகள் சுவிஸ்லாந்தில் வெளியீடு செய்யப்பட்டது. மதகுருமார்கள், தமிழ்பள்ளி அதிபர்கள்,ஆசிரியர்கள், போராளிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என 300 வரையான மக்கள் இந்த வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்தமை வெளியீட்டு விழாக்களில் கண்ட தாகம் வெளியீட்டு விழாவின் சிறப்பாகும். உலகம் பூராக ஒண்லைன் மூலமாகவும், நேரடியாகவும் இரா செங்கதிரின் சுரலயம் இசைப்பள்ளி நடைபெறுகிறது. இப்பள்ளியில் மூன்று தலைமுறைப்பாடகர்கள்குரல் பயிற்சி, இசைக்குழு பயிற்சி, பாடும் திறன் பயிற்சிகள் பெற்றுவருகின்றனர். இவர்களில் பலர் இந்த இசைப்பேழையில் பாடல்களை பாடியுள்ளனர்.தாயகப்பாடல்களின் இன்னொரு பரிணாமமாக எமது வலிகளை வேற்றினமக்களுக்கு அவர்களது மொழிகலந்து இப்படல் இசைப்பேழை வருவது சிறப்பம்சம். விழாவின் தொகுப்பு முல்லை மோகன் அவர்கள் வரவேற்புரை தேன்மொழி கலைச்செல்வன். வெளியீட்டுஉரை…

நடிக்க தெரியாது என்றவருக்கு டாப்சி பதில் !

தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்த டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்த டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் அவர் நடித்த நாம் சபானா, பிங்க், பட்லா உள்ளிட்ட படங்கள் வசூல் சாதனை நிகழ்த்தின. தமிழ், தெலுங்கில் சமீபத்தில் வெளியான கேம் ஓவர் படமும் வசூல் அள்ளியது. தற்போது துப்பாக்கியால் குறிபார்த்து சுடும் வீராங்கனைகள் பிரகாஷ் தோமார், சந்திரோ தோமர் ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘சாண்ட் கி ஆங்’ இந்தி படத்தில் டாப்சியும் பூமி பட்னேகரும் நடிக்கின்றனர். இந்த படத்துக்காக தயிர் கடைவது, பசுமாடுகளின் சாணம் எடுப்பது, பால் கறப்பது, டிராக்டர் ஓட்டுவது போன்ற தனது போஸ்டர்களை டாப்சி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் அனுபவ் சின்ஹா…

டோனி தயவு செய்து.. பிரபல பாடகி வேண்டுகோள்

2019 ஐ.சி.சி உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பின்னர், எம்.எஸ்.டோனி குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் எம்.எஸ். டோனி மைதானத்தில் இருக்கும் வரை நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி நிச்சயமாக வெற்றி பெறும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் இருந்தன. ஏன் எதிர் அணியினர் கூட டோனி இருக்கும் வரை வெற்றியை குறித்து நினைத்து பார்க்கவில்லை என்பதே உண்மை. ஆனால் தல டோனி அவுட் ஆனதும் இந்தியாவின் நம்பிக்கைகள் முறிந்தன. டோனி நோ-பந்தில் அவுட் செய்யப்பட்டார் என்று ஒருபுறம் விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. மற்றொரு புறத்தில் எம்.எஸ்.டோனி எப்பொழுது ஓய்வு பெறுகிறார்? என்ற சர்ச்சையும் நடந்து கொண்டிருக்கிறது. டோனியின் ஓய்வு குறித்த கேள்வி சாதாரண கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையில் மட்டுமல்ல. இந்திய கேப்டன் விராட் கோலியிடமும் கேட்கப்பட்டது. நேற்றைய (புதன்கிழமை)…

டோனி ரன் அவுட்: மாரடைப்பு ஏற்பட்டு ரசிகர் உயிரிழப்பு

நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் டோனி ரன் அவுட் ஆனதால் கிரிக்கெட் ரசிகர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் மைட்டி என்பவர் இந்தியா-நியூசிலாந்து உலகக்கோப்பை அரையிறுதி போட்டியை செல்போனில் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது டோனி ரன் அவுட் ஆனபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகே உள்ள கடைக்காரர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது ஒரு புறம் இருக்க, இந்தியா வெற்றி பெற்று விடும் நம்பிக்கை டோனி அவுட் ஆனதும் மங்கியது. பெவிலியன் திரும்போது டோனி அழுதுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் நேற்று இரவு முதல் வரை அவரை வாழ்த்தி…

கப்பம் கொடுத்தே வெற்றிகொண்டார் பிரதமர்

கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலம் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு உத்தரவாதம் கொடுத்தே அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டார். ரணில் விக்கிரமசிங்க வழமைபோன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சரியான ஒரு தீர்மானம் எடுத்திருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் வெற்றிகொண்டிருக்க முடியும். ஆனால் பிற்பகல் 4.30 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேசசபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம்…

தீவிரவாத தடுப்பு இணைப்பாளர் இலங்கை விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பான இணைப்பாளர் Gilles de Kerchove இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்போது மாலைதீவுக்கும் அவர் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. நாளை (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை அவரது விஜயம் இடம்பெறவுள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளுதல் தொடர்பில் உரிய பின்புலத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது அவரது விஜயத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இன்றைய போட்டியின் அணி நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 223 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. அவுஸ்திரேலிய அணி சார்பாக ஸ்மித் 119 பந்துகளை சந்தித்து 6 பௌண்டரிகள் உதவியுடன் 85 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதன்படி இங்கிலாந்து அணிக்கு 224 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது. பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 02 விக்கட் இழப்புக்கு…

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ​நேற்று ஆரம்பிக்கப்பட்டு இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகின. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.