இனியாவுக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி

வாகை சூட வா படத்தில் கிராமப்புற பெண்ணாக இயல்பான தோற்றத்தில் யதார்த்தமாக நடித்த இனியாவை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ் ஹீரோயின்களுக்கு சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் இனியாவும் ஒரு சராசரி நடிகைதான் என்ற விமர்சனங்களுக்கு உள்ளாக்கியது. விமர்சனங்களிலிருந்து மீண்டுவராவிட்டாலும் அவ்வப்போது ஒன்றிரண்டு படங்கள் அவரை கைதூக்கி விட்டுக் கொண்டிருக்கிறது.

காபி, காளிதாஸ் படங்களில் நடித்து வரும் இனியா, அப்படங்கள் முடிந்து எப்போது வெளியாகும் என்பது தெரியாததால் மியூசிக் ஆல்பம் தயாரிப்பதில் கவனத்தை திருப்பியிருக்கிறார். மியா என்ற பெயரில் தயாரித்திருக்கும் இந்த இசை ஆல்பத்தை வெளியிடுவதற்கு உதவியிருக்கிறார் விஜய் சேதுபதி.

‘நான் இந்த பூமியில் பிறந்தது ஏன் என்று விளங்கிடுமோ?’ என்று தொடங்கும் இனியாவின் இப்பாடல் ஆல்பம் நெட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

Related posts