இனியாவுக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி

வாகை சூட வா படத்தில் கிராமப்புற பெண்ணாக இயல்பான தோற்றத்தில் யதார்த்தமாக நடித்த இனியாவை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ் ஹீரோயின்களுக்கு சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் இனியாவும் ஒரு சராசரி நடிகைதான் என்ற விமர்சனங்களுக்கு உள்ளாக்கியது. விமர்சனங்களிலிருந்து மீண்டுவராவிட்டாலும் அவ்வப்போது ஒன்றிரண்டு படங்கள் அவரை கைதூக்கி விட்டுக் கொண்டிருக்கிறது. காபி, காளிதாஸ் படங்களில் நடித்து வரும் இனியா, அப்படங்கள் முடிந்து எப்போது வெளியாகும் என்பது தெரியாததால் மியூசிக் ஆல்பம் தயாரிப்பதில் கவனத்தை திருப்பியிருக்கிறார். மியா என்ற பெயரில் தயாரித்திருக்கும் இந்த இசை ஆல்பத்தை வெளியிடுவதற்கு உதவியிருக்கிறார் விஜய் சேதுபதி. ‘நான் இந்த பூமியில் பிறந்தது ஏன் என்று விளங்கிடுமோ?’ என்று தொடங்கும் இனியாவின் இப்பாடல் ஆல்பம் நெட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

மதுவுக்கு எதிராக பேராடி வரும் வழக்கறிஞர் நந்தினி

மதுவுக்கு எதிராக போராடி வரும் வழக்கறிஞர் நந்தினிக்கு குணா என்பவருடன் இன்று எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது. மதுவிலக்கு எனும் கோரிக்கையோடு பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி. இதற்காகப் பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். பல வழக்குகளும் அவர் மீது பதியப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் 27ம் தேதி நடைபெற்றது. அப்போது நந்தினி, ஐபிசி 328ன் படி, போதைப் பொருள் விற்பது குற்றம்தானே? என்று நீதிபதியிடம் வாதாடினார். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜூலை 5ம் தேதி, நந்தினிக்குத் திருமணமாகும் நிலையில்…

சீதை வேடத்தில் நயன்தாரா? ரூ.1,500 கோடியில் படமாகும்

ராமாயண காவியத்தை ஏற்கனவே பலர் படமாக்கி உள்ளனர். தற்போது இன்னொரு ராமாயண படத்தை ‘3டி’யில் எடுக்கின்றனர். இந்த படத்தை இந்தியில் தங்கல் படத்தை இயக்கி பிரபலமான நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து டைரக்டு செய்கிறார்கள். பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக தயாராகிறது. ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி செலவிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். ராமாயணத்தை படமாக்குவது குறித்து டைரக்டர்கள் நிதிஷ் திவாரி, ரவி உத்யவார் ஆகியோர் கூறியதாவது:-…

செவ்வாய் கிரகம் செல்லும் சீன விண்கலம் தயார்

செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதவாக்கில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் முடித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் தோற்றம், புவியியல் அமைப்பு, காந்த சக்தி உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். அதன்மூலம், செவ்வாய் கிரகம் உருவான விதம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும். மேலும், செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழும் அறிகுறி உள்ளதா? அங்கு மனிதர்கள் வாழும் அளவுக்கு நிலைமை மாறுமா? போன்ற விஷயங்களையும் ஆய்வு செய்வார்கள். செவ்வாய் கிரகத்தை சென்றடைய 7 மாதங்கள் ஆகும். அப்பயணம் வெற்றிகரமாக அமைந்தால், 2021-ம் ஆண்டில் அந்த விண்கலம் பூமிக்கு தகவல்களை அனுப்பும்.

பாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள்

யுனெஸ்கோவின் புதிய கணக்கெடுப்புப்படி உலகின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் அடிப்படையில் (எஸ்.டி.ஜி) 2030 காலக்கெடுவிற்குள் நான்கு பாகிஸ்தான் குழந்தைகளில் ஒருவர் ஆரம்பக் கல்வியை முடிக்க மாட்டார் என தெரிவித்து உள்ளது. யுனெஸ்கோவின் புதிய கணிப்புகள் படி அனைவருக்கும் 12 ஆண்டு கல்வி என்ற இலக்கை நோக்கிய திட்டத்தில் பாகிஸ்தான் இலக்கை பாதிதான் அடையும் என்பதைக் காட்டுகிறது, 50 சதவீத இளைஞர்கள் தற்போதைய விகிதத்தில் உயர்நிலைக் கல்வியை இன்னும் முடிக்கவில்லை. 2030-க்குள் 6-17 வயதுடைய ஆறில் ஒருவர் கலவி பெறுவதில் இருந்து வெளியேறுகிறார்கள் என்று டான் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. 40 சதவீதம் பேர் தற்போதைய விகிதத்தில் இடைநிலைக் கல்வியை முடிக்க மாட்டார்கள் என்று ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் கடமைகளை எதிர்கொள்ள வேண்டும். எங்களால் அவற்றைக் கண்காணிக்க முடியாவிட்டால் இலக்குகளை அமைப்பதில் என்ன பயன்?…

சிறுவர்கள் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை

நாடு முழுவதும் 18 வயதிற்கு குறைந்த சுமார் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக தேசிய அளவிலான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபைக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த ஆராய்ச்சி அறிக்கையை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், அவ்வறிக்கையில் 18 வயதிற்கு குறைந்த சுமார் 6100 சிறுவர்கள் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் அளவிலானோர் ஹெரோயின் போதைப்பொருளை தேடி அலைவதாகவும் இந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 15,000 பெண்களும் 85,000 ஆண்களும் உள்ளடங்குவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று இலட்சம் வரையானோர் கஞ்சா பயன்படுத்துவது இந்த…

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் ஆரம்பம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியதுடன், சற்றுமுன்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது. இங்கு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நாட்டு மக்கள் தொடர்பான பொறுப்புகளை வகிக்கும் தகுதி இந்த அரசாங்கத்திற்கு கிடையாது என தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை தடுக்க முடியாத அரசாங்கத்தினால் மக்கள் குறித்த பொறுப்புக்களை வகிக்க முடியாது எனவும் இவ்வாறான ஓர் அரசாங்கத்தை வீட்டுக்கும் அனுப்பி வைக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் சரியான முறையில் செயற்பட்டால் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வென்றெடுக்க…