சஜித் பிரேமதாஸவின் வேண்டுகோளிற்கு மோடியின் பதில்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைதந்த போது இந்நாட்டில் உருவாக்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அந்த வேண்டுகோளின் அடிப்படையில் இதுவரையில் இந்தியாவினால் வீட்டு திட்டங்களுக்காக 12 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (06) அத்தனகல்ல, ரண்பொகுகம பகுதியில் இடம்பெற்ற உதாகம்மான நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைதந்த போது அவருடைய பெயரில் ஶ்ரீமத் நரேந்திர மோடி எனும் ஊரை திஸ்ஸமஹராம பகுதியில் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்ததாகவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தை எனது கையில் ஒப்படைத்தால், சர்வதேசத்துடன் சக்திவாய்ந்த உறவுகளைப் பலப்படுத்தி எனது திறமையை நாட்டு மக்களுக்கு காட்டுவேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்படும் 100மாதிரி கிராமங்களின் முதலாவது கிராமம் நேற்று சனிக்கிழமை கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல பிரதேசத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சிலர் சஜித் பிரேமதாஸவின் வெளிநாட்டு கொள்கை என்னவென கேள்வியெழுப்பியுள்ளனர். நான் வெளிநாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் போது தாய்நாட்டுக்கு மதிப்பு சேர்க்கும் அபிவிருத்திகளை மேற்கொள்வேன்.

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது நான் அவரிடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் 12000ஆம் இலட்சம் நிதியை மாதிரி கிராமங்களை அமைக்க எமக்கு அளித்தார். கேள்வியெழுப்புபவர்களுக்கு இதுவே எமது சிறந்த பதிலாகும். ‘ரணிதுமக’ மாதிரி கிராமங்கள் எனது வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு நல்ல உதாரணமாகும்.

ஆட்சி அதிகாரம் என்ற அகப்பையை மக்கள் எனது கையில் தந்தால் அன்று தெரியும் எனது சர்வதேச கொள்கைகளும், உறவுகளும் எவ்வாறு இருக்குமென என்றார்.

Related posts