நான் தைரியமாகவும், தெளிவோடும் முடிவெடுப்பேன் பாரதிராஜா

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர். தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததற்கு விமர்சனங்கள் கிளம்பின.

சில தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா திடீரென அறிவித்தார். இந்த விசயத்தில் அவரை சிலர் திசை திருப்பி விட்டுள்ளனர் என கூறப்பட்டது.

இதுபற்றி அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சொந்த பணிகள், சில சூழ்நிலைகளால் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறேன்.

மூளைச்சலவை செய்து என் மனதை திசை திருப்பியதாக கூறுவது மனவேதனை அளிக்கிறது. எந்த விஷயத்திலும் நான் தைரியமாகவும், தெளிவோடும் முடிவெடுப்பேன் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

—–

சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை. போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது. ஆனால் அரசியலில் அப்படியில்லை ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள் என உதயநிதி பதவி குறித்து பாக்யராஜ் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

Related posts