முகிலனை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்

சமூக செயற்பாட்டாளர் முகிலனை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார். முகிலனை நீதிமன்றத்தில் விரைவாக ஆஜர்படுத்தி, உரிய மருத்துவ சிகிச்சையும், பாதுகாப்பும் தரவேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். ---- சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் விசாரிக்கப்படும் முகிலனை காண மனைவி பூங்கொடி வந்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு மாயமான சமூக செயற்பாட்டாளர் முகிலன் நேற்று இரவு திருப்பதியில் கண்டுப்பிடிக்கப்பட்டார். 6 மாதமாக முகிலன் எங்கு இருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சென்னை உயர்நிதிமன்றத்தில் முகிலனை நாளை போலீசார் ஆஜர்ப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ---- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி மாயமான சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் சிக்கினார். அவரை காட்பாடி ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த…

நான் தைரியமாகவும், தெளிவோடும் முடிவெடுப்பேன் பாரதிராஜா

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர். தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததற்கு விமர்சனங்கள் கிளம்பின. சில தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா திடீரென அறிவித்தார். இந்த விசயத்தில் அவரை சிலர் திசை திருப்பி விட்டுள்ளனர் என கூறப்பட்டது. இதுபற்றி அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சொந்த பணிகள், சில சூழ்நிலைகளால் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறேன். மூளைச்சலவை செய்து என் மனதை திசை திருப்பியதாக கூறுவது மனவேதனை…

அறம் சொல்ல அவ்வை எதற்கு? நயன்தாராவே வேண்டும் நம்மாளுக்கு..

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அறம். ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் கதையம்சத்தில் வந்தது. இதில் நயன்தாரா கலெக்டராக வந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. வெற்றி பெற்ற பல படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வரிசையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் நயன்தாராவே மீண்டும் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் விரும்புகின்றனர். ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நயன்தாராவின் கொலையுதிர் காலம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் பிகில் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி…

தமிழுக்கு இடமில்லை கனிமொழி எம்.பி. கண்டனம்

தமிழக மக்களின் வரி பணத்தில் வாங்கிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என தி.மு.க. எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,001 கோடி ரூபாய் செலவில் 3,381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 4ந்தேதி 500 புதிய பேருந்துகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்திற்கு 100 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பேருந்தில் அவசர வழி என்று குறிப்பிடும் பகுதியில்…

அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ளதால் ஏ சான்றிதழ்.!

இளைஞர்களின் மனதில் எப்போதுமே ஓர் இடத்தை தக்கவைத்து கொள்பவரே நடிகை அமலாபால். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆடை’. இப்படத்தை ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ளதால் தணிக்கை குழு இப்படத்திற்கு ''ஏ'' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 19-ந் திகதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாநேற்று நடைபெற்றது. அதில் அமலாபால் பேசுகையில், "ஆடை படத்தில் நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், அந்த காட்சியின் படப்பிடிப்பின்போது எனக்கு படபடப்பாக இருந்தது. ஆனால் படக்குழுவினர் எனக்கு முழு பாதுகாப்பு அளித்தனர். அந்த காட்சி படமாக்கப்பட்டபோது கெமரா மற்றும் லைட்டிங் குழுவில் உள்ள 15 பேர் தவிர…

யாழிலிருந்து விமான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைந்த செலவில் மேற்கொள்வதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். நிதியமைச்சினூடாக குறிப்பிட்டதொகை நிதிப் பங்களிப்புடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், 2015க்கு பின்னர் வடக்கில் அதிகளவான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் எமது அரசாங்கம் ஆர்வமாக இருந்துவருகிறது. துறைமுக அமைச்சராக இருந்தபோது காங்கேசந்துறை துறைமுகத்தின் மேம்பாடு குறித்து கூடிய கவன செலுத்தினேன். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பும் கிடைத்தது. மேலும் எமது பிரதமர் இந்திய அரசுடன் கிழமைக்கு ஒரு தடவையேனும் சந்தித்து நாட்டின் அபிவிருத்தித் திடங்கள்…

சஜித் பிரேமதாஸவின் வேண்டுகோளிற்கு மோடியின் பதில்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைதந்த போது இந்நாட்டில் உருவாக்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அந்த வேண்டுகோளின் அடிப்படையில் இதுவரையில் இந்தியாவினால் வீட்டு திட்டங்களுக்காக 12 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று (06) அத்தனகல்ல, ரண்பொகுகம பகுதியில் இடம்பெற்ற உதாகம்மான நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைதந்த போது அவருடைய பெயரில் ஶ்ரீமத் நரேந்திர மோடி எனும் ஊரை திஸ்ஸமஹராம பகுதியில் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்ததாகவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை எனது கையில் ஒப்படைத்தால், சர்வதேசத்துடன் சக்திவாய்ந்த உறவுகளைப் பலப்படுத்தி எனது திறமையை நாட்டு மக்களுக்கு காட்டுவேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்படும் 100மாதிரி…