இலங்கை தமிழரசு கட்சியின் 16வது மாநில மாநாடு யாழில்

இலங்கை தமிழரசுக் கட்சியின் 16 வது மாநில மாநாடு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்துள்ளது. தமிழரசு கட்சியின் முக்கிய தலைவர்களான சம்மந்தன், சுமந்திரன், மாவை, சி.வி.கே போன்ற அரசியல் தலைவர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

எப்படி தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டம் நடைபெறுமோ அது போல ஓர் அரசியல் சாயல் இந்த மாநாட்டிலும் காணப்பட்டது.

அங்கு கூட்டம் நடைபெற மறுபுறம் தொண்டர்கள் புரியாணியை முடிய முன்னர் ஒரு கை பார்த்துவிட நினைத்து வேகமாக கைவரிசை காட்டினார்கள்.

தமிழரசுக்கட்சி வளர்ச்சியடையாத தமிழக ஊழல் கட்சிகளை முன்மாதிரியாகக் கொள்வது அடிப்படை தவறு. அது தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் தவறாகும்.

2009 போருக்கு பிறகாவது தவிர்த்திருக்க வேண்டும். ஆனாலும் இலங்கைக்கு ஒதுக்கிய பணத்தில் ஒரு திராவிட அரசியலை தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்பதை மறுக்கவும் முடியாது.

வெளியே காணாமல் போனவர்களின் உறவுகள் 832 தினங்கள் போராடியும் தொடர்பில்லை என்று கண்ணீர் வடித்து தமிழரசு கட்சி தலைவர்களை திட்டி வசைபாட முக்கோண காட்சிகள் அரங்கேறின.

காணாமல் போனோருடைய போராட்டத்திற்கு மாநாடு முடிந்த பின் பதில் தருவதாக சுமந்திரன்கூற, வெகு தொலைவில் இருந்து வந்து கண்ணீர் விட்டனர் போராட்டக்காரர்.

01. தமிழரசு கட்சி திராவிட முன்னேற்றக்கழகம் போல அரசியலை முன்னெடுப்பது முதல் தவறு..
02. காணாமல் போனவர்கள் கேட்கும் தொகையும் அரசு காட்டும் கணக்கும் பலத்த இடைவெளி கொண்டுள்ளது.
03. காணாமல் போனோரை தமிரசுக்கட்சி மாநாட்டில் போய் கேளுங்கள் என்று யாரோ எதிரணியினர் தூண்டிவிட்டதாக சிலர் கூறுகிறார்கள்.
04. தமிழரசுக்கட்சியால் அவர்களை மீட்க முடிந்திருந்தால் எப்போதோ மீட்டு வீரம் பேசியிருப்பார்கள். அவர்களால் முடியாது என்பதை இனியும் உணராதிருப்பது தவறு. இலங்கை அரசியல் பனம் பழம் விழும்போது காகம் இருப்பது போல விழுகிற இடத்தில் உட்காரும் அரசியலே அல்லாது பாவம் அவர்களால் எதுவும் முடியாதென்பதே உண்மையாகும்.

தமிழரசுக்கட்சியால் முடியாதென்றால் மற்றவர்களும் அது போல மூன்று கால் குதிரைகள்தான்.. அனைத்தும் வீணான வழிகளே என்பதை உணராதவரை இது போன்ற துயர்கள் தொடரும்.

எங்கோ தொலைத்ததை வெளிச்சமுள்ள வீரசிங்கம் மண்டபத்தில் தேடி என்ன பயன்..?

அலைகள் 30.06.2019

Related posts