பிரபாகரனை தொடரும் கருணா, வியாழேந்திரன்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதமேந்தி போராடியதன் விளைவு பாரதூரமாக அமைந்தது. இன்று இப்போராட்டங்களின் தொடர்ச்சியினை தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த பிக்குமார்களுடன் ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்கின்றார்கள் என முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மில்ஹான் தெரிவித்தார்.

ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியை தமிழ் அரசியல்வாதிகள் பிக்குமாருடன் இணைந்து கல்முனை வடக்கு பிரதேச சபையினை தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய தற்போது தரமுயர்த்தினால் தமிழ் தரப்பு நாளை நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய பதவிகளுக்கு தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று போராடுவார்கள் இவற்றை நிறைவேற்ற நாட்டு மக்கள் ஒத்துழைப்பார்களா?

ஏப்ரல் குண்டுத்தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகளை உள்ளடக்கிய 10 கோரிக்கைகளை முன்வைத்து முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் நேற்று செவ்வாய்க்கிழமை புதுக்கடை நீதிமன்றத்தின் அருகில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டார்கள் இதன் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குண்டு தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் உளவியல் ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து இடங்களிலும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள். கல்முனை வடக்கு பிரதேச சபையினை தரமுயர்த் துமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மற்றும் கருணா போராட்டங்களை முன்னெடுப்பது பாரிய விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதமேந்தி போராடியதன் விளைவு பாரதூரமாக அமைந்தது. இன்று இப்போராட்டங்களின் தொடர்ச்சியினை தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த பிக்குமார்களுடன் ஒன்றினைந்து முன்னெடுத்து செல்கின்றார்கள்.

கல்முனை வடக்கு பிரதேச சபையினை தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய தற்போது தரமுயர்த்தினால் தமிழ் தரப்பு நாளை நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய பதவிகளுக்கு தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று போராடுவார்கள் இவற்றை நிறைவேற்ற நாட்டு மக்கள் ஒத்துழைப்பார்களா,

இந்நாட்டில் சிறுபான்மை மக்கள் என்ற ரீதியில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது. அன்று தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இன்று முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். தற்போதைய நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமிழ் மக்களை திசை திருப்பி விடும் அரசியல் சூழ்ச்சிகளே காணப்படுகின்றது.

யதார்த்த தன்மையினை சிறுபான்மை இன மக்கள் ஒன்றிணைந்து புரிந்துக் கொள்ளவேண்டும். ஒரு தலைப்பட்சமாக செயற்படும் ஒரு சில பௌத்த பிக்குகள் தற்போது முன்வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் தமிழ் – முஸ்லிம் சமூகத்திற்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் தூரநோக்குடன் ஆராய வேண்டும் என்றார்.

Related posts