இப்போதெல்லாம் இலங்கையை யாருமே மதிப்பதில்லை..

சிறிலங்கா என்ற நாட்டை யாருமே ஒரு நாடாக மதிப்பதில்லை என்ற உண்மையை சிறீலங்கா அரசியல்வாதிகளே புரிந்துள்ளது வரவேற்கத்தக்கது.

சிங்கள, தமிழ், முஸ்லீம் தலைவர்களில் 90 வீதம் தகுதியற்றவர் என்ற ஜனாதிபதி கருத்து தவறு, 99 வீதம் என்று சொல்லியிருக்கலாம்.

அப்படியானால் மக்கள் சரியா.. மக்களுக்கேற்ற தலைவர்களே இருக்கிறார்கள். மக்கள் வேறு அரசியல்வாதிகள் வேறல்ல என்பதே உண்மை. இது குறித்த செய்தி..

அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்த போதிலும் நாட்டில் பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜீ – 07 மாநாட்டில் உலக தலைவர்கள் எமது ஜனாதிபதி இருந்த இடத்திற்கே வந்து வழங்கிய மதிப்பை ஜனாதிபதியே இல்லாது செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு அட்சி மாற்றத்துடன் இலங்கை தொடர்பில் சர்வதேசம் மிகுந்த மரியாதை வைத்திருந்ததாகவும், அது ஒக்டோபர் 26ம் திகதியுடன் இல்லாது போய்விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

தற்போது கசகஸ்தான், பலுகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து மாத்திரமே ஜனாதிபதிக்கு அழைப்பு வருவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

மஹிந்த ரஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும் இலங்கைக்கு வருகை தந்தது இதுபோன்ற நாடுகள் மாத்திரமே என்றும், அந்த நிலையை தற்போதைய ஜனாதிபதி மீண்டும் உருவாக்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

Related posts