கள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்

தெரணியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணஹிங்கந்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரணஹிங்கந்த பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நிலந்தி ரத்னாயக்க எனும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கள்ள தொடர்பு வைத்திருந்த ஊமை நபர் ஒருவரினால் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்த நபர் அவ்விடத்திலேயே நஞ்சருந்தி விழுந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த நபர் தெரணியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெரணியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts