30க்கு முன்னால் சொந்தமாக வீடு, கார் வாங்க வேண்டும்

நடிகை டாப்சி அளித்த பேட்டி வருமாறு:- “சிறுவயதில் இருந்தே நேரத்தின் முக்கியத்துவம் தெரியும். அதை எப்போதும் வீணாக்கியது இல்லை. நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். இவ்வளவு பெரிய நடிகையாக ஆனபிறகும் ஆடம்பரத்துக்கு ஆசைப்படவில்லை. சிக்கனமாக செலவு செய்கிறேன். வரவு செலவு கணக்கையும் எழுதி வைத்துள்ளேன். 30 வயதை அடைவதற்கு முன்னால் சொந்தமாக வீடு, கார் வாங்க வேண்டும். நிரந்தரமாக ஒரு தொழில் இருக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அதனால்தான் எனது தந்தையை சம்மதிக்க வைத்து சினிமாவுக்கு வந்தேன். இப்போது எனது கனவு நிறைவேறி இருக்கிறது. விலை மதிப்பில்லா மும்பை பகுதியில் அதிக விலையில் சொந்தமாக வீடும், பி.எம்.டபுள்யூ காரும் வாங்கி இருக்கிறேன். வெற்றியை விட அதிக தோல்விகளை சந்தித்து இருக்கிறேன். ஆனாலும் ஏன் சினிமா தொழிலுக்கு வந்தோம் என்று நினைத்தது இல்லை. நான்கு சுவர்களுக்குள் காலை முதல்…

ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பு

ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் எந்த நடிகையும் இதுபோல் துணிச்சலாக நடித்தது இல்லை. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த காட்சிகள் இருந்தன. இந்த டிரெய்லரை அதிகமானோர் பார்த்துள்ளனர். நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும், அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். இதுபோல் அமலாபாலின் அம்மா பேசும் செல்போன் நம்பர் டிரெய்லரில் இருந்தது. அந்த நம்பருக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் போன் செய்து நீங்கள் அமலாபால் அம்மாவா? அமலாபாலின் போன் நம்பர் கிடைக்குமா? என்று பேசி வருகிறார்கள். அந்த நம்பர் உதவி இயக்குனருடையது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடை படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார். இந்த நிலையில் ஆடை டிரெய்லரில் இருந்த காட்சிகளை வைத்து அமலாபாலை…

வீடு வாங்கிய நடிகை தமன்னா ; சதுர அடி ரூ.80,77

மும்பையின் மேற்கு புறநகர் பகுதியில் நடிகை ஒருவர் அதிக விலை கொடுத்து பிளாட் ஒன்று வாங்கி உள்ளார். பாகுபலி புகழ் நடிகை தமன்னா பாட்டியா சமீபத்தில் வெர்சோவாவில் சதுர அடி ரூ .80,778 க்கு ஒரு பிளாட் வாங்கி உள்ளார். இது இப்பகுதியில் உள்ள விலை விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அபார்ட்மெண்ட் குடியிருப்பை பில்டர் சமீர் போஜ்வானியிடமிருந்து தமன்னா வாங்கியுள்ளார். தரகர்களின் கூற்றுப்படி, இந்த கட்டிடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வரவிருக்கும் கட்டிடத்திற்கு சதுர அடி ரூ .35,000-40,000 ஆகும். கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் செய்தித்தாள் தகவல்படி 2,055 சதுர அடி பிளாட்டிற்கு ரூ .16.60 கோடி தமன்னா செலுத்தியதாகக் காட்டுகிறது. அபார்ட்மெண்டிற்கான ஆயத்த கணக்கீட்டு விகிதம் ரூ.4.56 கோடி. அவர் பிளாட் பதிவு செய்வதற்கு ரூ.99.60 லட்சம் ஸ்டாம்ப் டூட்டியாக…

176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: கர்டினல் ரஞ்சித்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. ஆனால் இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.டி.ஜே.) மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இலங்கை குண்டுவெடிப்புகளில் 258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இலங்கையின் கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் மால்கோல்ம் ரஞ்சித் கூறியதாவது:- “இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த குழந்தைகள் இயல்பு நிலையை எட்டுவதற்கான பணிகளில் தேவாலயம் கவனம் செலுத்துகிறது” என்றார். கடந்த வாரம் ரோம் சென்றபோது கர்டினல் ரஞ்சித் இந்த தகவலை தெரிவித்ததாக இலங்கையில்…

பிரபாகரனை தொடரும் கருணா, வியாழேந்திரன்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதமேந்தி போராடியதன் விளைவு பாரதூரமாக அமைந்தது. இன்று இப்போராட்டங்களின் தொடர்ச்சியினை தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த பிக்குமார்களுடன் ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்கின்றார்கள் என முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மில்ஹான் தெரிவித்தார். ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியை தமிழ் அரசியல்வாதிகள் பிக்குமாருடன் இணைந்து கல்முனை வடக்கு பிரதேச சபையினை தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய தற்போது தரமுயர்த்தினால் தமிழ் தரப்பு நாளை நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய பதவிகளுக்கு தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று போராடுவார்கள் இவற்றை நிறைவேற்ற நாட்டு மக்கள் ஒத்துழைப்பார்களா? ஏப்ரல் குண்டுத்தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகளை உள்ளடக்கிய 10 கோரிக்கைகளை முன்வைத்து முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் நேற்று செவ்வாய்க்கிழமை புதுக்கடை நீதிமன்றத்தின் அருகில்…

கள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு தானும் நஞ்சருந்திய ஊமை நபர்

தெரணியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணஹிங்கந்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரணஹிங்கந்த பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நிலந்தி ரத்னாயக்க எனும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கள்ள தொடர்பு வைத்திருந்த ஊமை நபர் ஒருவரினால் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலை செய்த நபர் அவ்விடத்திலேயே நஞ்சருந்தி விழுந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் குறித்த நபர் தெரணியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் தெரணியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிர்த்தும் உயிர்க்காத ஞாயிறு தாக்குதல் ரிஷாத் பதியுதீன் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளருக்கும், தொழில்துறை அபிவிருத்தி சபையின் பொது முகாமையாளருக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முன் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாராளுமன்றத் தெரிவுக் குழு இனிவரும் நாட்களில் நடத்தும் விசாரணைகளின் இரகசியத் தன்மையை பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. சில சாட்சி விசாரணைகளின் போது ஊடகங்கள் இன்று விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் திகதி தெரிவுக்குழு உறுப்பினர்கள் கலந்துரையாடி இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனர். -------- பண மோசடி செய்ததை தவிர நாட்டில் வேறு எவ்வித அபிவிருத்தியையும் தற்போதைய அரசாங்கம் செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தனது ஆட்சிக் காலத்தில்…