அலைகள் வாராந்த பழமொழிகள் 24.06.2019

01. எதைச் செய்தாலும் அதற்கு சரியான வயதில்தான் இருக்கின்றோம் என்று நினையுங்கள். இப்படி எண்ணுவோர் தொகை உலகில் மிகமிக குறைவாகவே இருக்கிறது. இது ஒரு கவலை தரும் விடயமாகும்.

02. எனக்கு மிகவும் வயதாகிவிட்டது என்ற சாக்குப் போக்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மையாக வரக்கூடிய வாய்ப்புக்களை எல்லாம் பறித்து சென்றுவிட்டது. மேலும் தங்கள் வயது பொருத்தமானதல்ல என்று நினைப்பதால் பெரும்பாலானவர்கள் முயற்சிப்பது கூட இல்லை.

03. ஒரு செயலை செய்யாது விடுவதற்கு வயது ஒரு சாக்குப்போக்காக இருப்பது பல இடங்களில் சிறிய சிறிய நோய்கள் போல பரவியுள்ளது.

04. உங்களுக்கு எவ்வளவு வயதாகியுள்ளதாக நினைக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கான உண்மையான வயதாகும்.

05. வாய்ப்புக்கள் நிறைந்த ஆண்டுகள் நமக்கு உயிருள்ளவரை இருக்கிறது. வாழ்க்கை முடிந்து போனதென நினைத்து மரண அறிவித்தலை பார்த்து, நமக்கு எப்போ மரணம் என்று கலங்கி, உலகிற்கு பாரமாக இருக்க வேண்டாம்.

06. வயது குறித்த மனப்பாங்குதான் பல விடயங்களை செய்ய எமக்கு பெரும் தடையாக இருக்கிறது.

07. வயதை காரணம் காட்டி ஒரு செயலை செய்யாதிருப்பதை நீங்கள் தவிர்த்தால் இளமையாக இருப்பதை உணர்வீர்கள்.

08. முதுமை என்பது தோல்விக்கு வித்திடுகின்ற ஒரு நோய். மனிதனை முன்னேறவிடாதபடி தடுக்கும் ஒரு சமுதாயப் பெரு நோய்.

09. பாராட்ட எனக்கு வயது போதாது என்று பலர் முக நூல்களில் எழுதுவதை காண்பீர்கள். இது வயதாகிவிட்டதென எதையும் செய்யாமல் இருக்கும் நோயை விட பல மடங்கு பெரிய நோயாகும்.

10. வயலில் வேலை செய்யும் ஒரு சிறுவன் பெரியவர்கள் செய்வதைவிட அதிகம் செய்கிறான். இங்கு அவனுக்கு வயது ஒரு பிரச்சனையல்ல. எப்போதுமே செயல்தான் முக்கியமல்லாமல் வயது என்பது முக்கியமல்ல.

11. உங்களைவிட வயதில் கூடியவர்கள் உங்களுக்குக் கீழே வேலை செய்கிறார்களே என்று யோசிக்காதீர்கள். வயது அங்கு முக்கியமல்ல பணிதான் முக்கியமாகும்.

12. ஒரு பணிக்கு உடற் பலம், வயது என்பது முக்கியமல்ல உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது என்பதுதான் முக்கியம்.

13. திறமைக்கும் வயதுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. உங்களால் ஒரு பணியை திறமையாக செய்ய முடியுமென்பதை உணர்ந்தால், உங்கள் நிறுவனத்தால் அவ்வளவு உயர்ந்த பணிகளை உங்களுக்கு வழங்குவார்கள்.

14. நான் இப்போதிருக்கும் வயதைவிட இளமையாக இருக்கிறேன் என்று எண்ணுங்கள் புதிய தொடுவானங்களை தொடுவீர்கள். எப்போதும் உற்சாகத்தையும் இளமையையும் உணருங்கள்.

15. உங்கள் மனம் எதிர்மறையாக எண்ணி காலம் கடந்துவிட்டதாக கருதினால், அது போலவே காலமும் கடந்துவிடும் பின்னர் சுடுகாடுதான் உங்களை வரவேற்கும். உங்களை வரவேற்க உலகில் வேறு யாருமே இருக்கமாட்டார்கள்.

16. நான் இப்போதுதான் தொடக்கப்போகிறேன் என்னுடை சிறந்த வருடங்கள் இனித்தான் வரப்போகின்றன என்று சிந்தியுங்கள். வெற்றிகரமான மக்கள் இப்படித்தான் சிந்திக்கின்றனர்.

17. எனது சிறந்த வருடங்கள் இனித்தான் வரவுள்ளன என்று சிந்தியுங்கள்.

18. இந்த உலகில் எதுவுமே தற்செயலானது அல்ல. ஒரு சாலை விபத்து, இடியுடன் கூடிய மழை என்று எத்தனையோ நடக்கின்றன. அவை எதுவுமே தற்செயலானவை அல்ல.

19. வெற்றிக்கு அதிர்~;டமோ துரதிரு~;டமோ காரணமல்ல. உழைப்பே வெற்றிக்கான அடிப்படையாகும். இங்கு யாருமே பதவிகளுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவதில்லை.

20. வாடிக்கையாளருக்கு எது பிடிக்கும் என்று கண்விழித்து தேடியவருக்கு வெற்றி கிடைத்தது அது கடவுள் அருள் அல்ல.

21. தன் வேலையை கவனமாக திட்டமிட்டு செய்வது அதிர்டமல்ல. இதை ஓர் அதிர்டமென நீங்கள் நினைத்தால் அதற்கு நாம் செய்ய எதுவும் இல்லை.

22. வர்த்தகம், நிர்வாகம், விற்பனை, சட்டம், பொறியியல், நடிப்பு போன்ற ஒவ்வொரு வேலையிலும் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் நேர்மறையான எண்ணங்களாலும், கடின உழைப்பாலுமே உயர் நிலை பெற்றார்கள். அதிர்டத்தால் அல்ல.

23. வெற்றியாளன் தோல்வியில் இருந்து பாடம் படிக்கிறான்.. தோல்வியாளன் தனக்கு வரும் தோல்வியில் இருந்து பாடம் படிக்க தவறிவிடுகிறான்.

24. வெற்றியை உருவாக்கிக் கொடுக்கின்ற வெற்றி கொள்கைகளை கற்றுத் தேர்ந்து கொள்ளுங்கள்.

25. நல்ல விடயங்களை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் விதத்தில் அதிர்~;டம் வடிவமைக்கப்படவில்லை. உங்களை வெற்றியாளராக ஆக்கக் டிய பண்பு நலன்களை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

அலைகள் பழமொழிகள் 24.06.2019

தொடர்ந்தும் வரும்..

Related posts