நிதி அளிப்பதை நிறுத்தாவிடில் கறுப்புப் பட்டியல்

ஏற்கெனவே ஒப்புக்கொண்டதற்கு இணங்க தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பதை தடுக்கும் நடவடிக்கைகளை வரும் அக்டோபருக்குள் தீவிரமாக பின்பற்றாவிட்டால் கறுப்புப் பட்டியலில் இணைப்போம் என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை வளர்க்கும் விதமாக தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பதை தடுப்பதில்லை என்று சர்வதேச நாடுகளிடம் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்திவந்தன. இதன் ஒரு பகுதியாக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என்று கண்டித்தது. இது தொடர்பாக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பதை தடுப்பதில் பாகிஸ்தான் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தோம், அந்த உடன்படிக்கையின்படி வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேற்கண்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த தவறினால் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் இணைப்பது…

பிகில் படத்தின் 3வது போஸ்டர் வெளியீடு

அட்லி, விஜய் கூட்டணியில் ‘தெறி, மெர்சல்’ படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இதன்பின் வெளியான ‘சர்கார்’ படமும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதுடன், வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே ‘தளபதி 63’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் தலைப்பை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். வெறித்தனம், மைக்கேல் உள்ளிட்ட சில பெயர்களும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் தலைப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. முந்தைய படங்களான தெறி, மெர்சல், சர்கார் பட தலைப்புகளும் அவருடைய பிறந்தநாளிலேயே வெளிவந்தன. அதுபோல், விஜய்யின் 63வது படத்தின் தலைப்பையும், அவருடைய…

பிகில் பட தலைப்பு பற்றிய விளக்கம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், ரெபா மானிகா, ஆனந்தராஜ், தேவதர்ஷினி ஆகியோரும் உள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இது விஜய்க்கு 63-வது படம் ஆகும். இந்த படத்தில் அவர், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் கால்பந்தாட்ட மைதானத்தை படக்குழுவினர் இதற்காக அமைத்து இருந்தனர். அதில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே ‘தளபதி 63’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி நேற்று மாலை படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்து வரும் 63-வது படத்துக்கு ‘பிகில்’ என்று பெயர்…

நடிகை விஷ்ணுபிரியா திருமணம் கேரளாவில்

தமிழில் செல்வா இயக்கிய ‘நாங்க’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஷ்ணுபிரியா. புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஸ்பீடு டிராக் படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். ராத்திரி மழா, மகர மன்சு, கிரைம் ஸ்டோரி, பெண் பட்டினம், நாட்டி பிரபொசர், காட்ஸ் ஓன் கண்ட்ரி உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாள டி.வி. தொடர்களிலும் நடிக்கிறார். விஷ்ணுபிரியா பரதநாட்டியம் கற்றவர். மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடி வருகிறார். விஷ்ணுபிரியாவுக்கும், பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் ஆழப்புழையில் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். நடிகைகள் பாமா, சுருதி லட்சுமி, இயக்குனர் சித்திக் உள்பட பலர் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று…

விஜய்யை அரசியலுக்கு அழைத்து ‘போஸ்டர்’

ரஜினிகாந்த், கமல்ஹாசனை அடுத்து விஜய்யின் அரசியல் பிரவேசமும் எதிர்பார்ப்பில் உள்ளது. 1992-ல் நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய் இப்போது பிரபல நாயகனாக உயர்ந்து இருக்கிறார். இவரது படங்கள் உலக அளவில் நல்ல வசூலை அள்ளுகின்றன. கேரளா, ஆந்திராவிலும் பெரிய மார்க்கெட் உள்ளது. வலுவான ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பிருந்தே விஜய் நடவடிக்கைகளில் அரசியல் இருப்பதாக கருதப்பட்டது. 2008-ல் ரசிகர் மன்றத்தை திடீரென்று விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதற்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார். இளைஞர் அணி, மாணவர் அணி என்று அரசியல் கட்சிக்கு இணையாக அமைப்புகளை உருவாக்கினார். மாநில-மாவட்ட பொறுப்புகளில் இருந்து ஒன்றிய நகர பூத் கமிட்டி வரை நிர்வாகிகளை நியமனம் செய்து அரசியல் கட்சிக்கு இணையாக அமைப்பை வலுப்படுத்தி வைத்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் எப்போது வேண்டுமானாலும் அரசியல்…

பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்

இங்கிலாந்து அமைச்சர் ஒருவர் ஒரு பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஒரு வீடியோ இங்கிலாந்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் கூட்டம் ஒன்றில் இங்கிலாந்து கருவூலத்தின் அதிபர் (Chancellor of the Exchequer) என்னும் முக்கிய பொறுப்பிலிருக்கும் பிலிப் ஹம்மண்ட் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென கிரீன்பீஸ் அமைப்பைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்து குரல் எழுப்பத் தொடங்கினர். இதனால் கூட்டத்திற்கிடையில் குழப்பம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஒரு பெண் சமூக ஆர்வலர் முக்கிய பேச்சாளரை நோக்கிச் செல்ல முயன்றார்.அப்போது அங்கு அமர்ந்திருந்த அமைச்சர் மார்க் பீல்டு என்பவர் சட்டென எழுந்து அந்தப் பெண்ணின் கழுத்தைப் பிடித்து தள்ளிக்கொண்டே போய் அவரை கட்டிடத்திலிருந்து வெளியேற்றினார். ஒரு பெண்ணை இப்படி நடத்தலாமா என கேள்விகள் எழ, அந்தப் பகுதியில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை, எனவே நான்…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 25

கீழ்ப்படிதலை எதிர்பார்க்கும் தேவன். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். ஆதியாகமம் 22:18. இன்று இலங்கையில் நடைபெறும் போராட்டங்களும், அதனைத் தீர்க்க எடுக்க முயற்சிக்கும் வழிகளையும், அதனால் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளும் மக்களை அமைதி இழந்து வாழும் ஓர் அவலநிலைக்கு அழைத்துச் செல்வதை நாம் காணக் கூடியாதாக உள்ளது. இதற்குக் காரணம் கீழ்படிதலை விரும்பாத ஓர் வாழ்வின் செயலாகும். (சுயவிருப்பம் ஆலோசனையாக இருப்பதனால்) தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் தேவகட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியைப்புசித்து தேவனுடனான உறவை முறித்துக்கொண்டனர். அதனால் தேவன் தாம் உண்டாக்கிய மக்களை நினைத்து துக்கித்தார். ஆனால் தேவன் ஆபிரகாமைக் குறித்து…

இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. ஆனால் இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.டி.ஜே.) மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இலங்கை குண்டுவெடிப்புகளில் 258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 9 பேர் தற்கொலை வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். என்.டி.ஜே. அமைப்பின் தலைவரான ஜஹ்ரான் ஹாசிம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியாகி விட்டார். இந்த நிலையில், இலங்கையின் தெற்கே கல்லி நகரில் கூட்டமொன்றில் பேசிய அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, ஜஹ்ரானின் குழுவை சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர் என போலீசாரிடம் இருந்து எனக்கு அறிக்கை வந்துள்ளது. அவருடன் தொடர்பு வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. ஜஹ்ரானின் போதனை கூட்டங்களில் கலந்து கொண்டோரிடமும்…

90 சதவீதமான அரசியல்வாதிகள் தகுதியற்றவர்கள் : ஜனாதிபதி

நாட்டில் நூற்றுக்கு பத்து வீதமான அரசியல்வாதிகள் மாத்திரமே அரசியலுக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். எஞ்சிய தகுதியற்ற அரசியல்வாதிகளே அதிகமாக தீய செயல்களில் ஈடுபடுகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்,அவ்வாறான அரசியல்வாதிகளுடன் சேர்ந்து அரச திணைக்களங்களில் பணியாற்றும் அரச அதிகாரிகளும் தீய வழியில் செல்கின்றனர். அரச அதிகாரிகளிலும் நூற்றுக்கு 10 வீதமானவர்களே ஒழுக்கமானவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இரத்தினபுரி நிவித்திகலை சுமன மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டிட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, வாக்குகளை மாத்திரமே இலக்காகக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளுக்கு நாட்டைப்பற்றி சிறிதளவும் அக்கறை இல்லை. இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் போதைப் பொருள் பாவனையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது. நாட்டில் நூற்றுக்கு…

கொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு

யாழ். கொடிகாமம், எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (21) பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் எழுதுமட்டுவாழை சேர்ந்த 50வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காங்கேசந்துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த ரயிலே குறித்த பெண் மீது மோதியுள்ளது. குறித்த பெண், ரயில் பாதையை கடந்து செல்ல முற்பட்டபோது விபத்திற்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.