கடனில் அனில்அம்பானி ரூ.14,650 கோடி கடன்பாக்கி

கடனில் தத்தளிக்கும் ரிலையன்ஸ் கம்பெனியின் அதிபர் அனில் அம்பானி, ₹14,650 கோடி கடன்பாக்கியை உடனே வழங்க வேண்டும் என சீன வங்கிகள் நெருக்க ஆரம்பித்து விட்டன. அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு இந்தியாவில் கடன் பாக்கி இருந்தது. இதை உடனே கட்ட கோர்ட் உத்தரவிட்டது. தம்பியின் ரிலையன்ஸ் கம்பெனியை எடுத்து கொண்டு அந்த சொத்துக்கு ஈடாக 17,300 கோடி ரூபாய் தர சம்மதித்தார் முகேஷ் அம்பானி. ஆனால், செபி உட்பட பல்வேறு அரசு அமைப்புகளின் நடைமுறைகளில் சிக்கல் காரணமாக, இன்னும் முழுமையாக கடன் அடைக்கப்படவில்லை. இந்த நிலையில், சீனாவில் இருந்து வங்கிகள் தங்களுக்கு அனில் அம்பானி ₹14,650 கோடி பாக்கி வைத்துள்ளார். அதை உடனே அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. சீன வளர்ச்சி வங்கிக்கு மட்டும் ₹9,860 கோடி, சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் ₹3,360 கோடி கடன்…

நடிகர் சங்க தேர்தல் ரத்து ?

நடிகர் சங்க தேர்தல் எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் 23ந்தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்தது . நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னரை சந்தித்தனர். கவர்னரை விஷால், நாசர், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் சந்தித்தனர். நடிகர் சங்கத் தேர்தலை சென்னை நகர் பகுதியில் நடத்த அனுமதி தர முடியாது என நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடி என எழுந்த புகார் குறித்து பதிவாளர் ஏற்கனவே விளக்கம் கேட்டிருந்தார். மொத்தம் 61 உறுப்பினர்கள் நீக்கப்பட்டிருப்பதாக பதிவாளருக்கு புகார் வந்தது குறிப்பிடத்தக்கது. ------ சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23-ம் தேதி…

அஜித் படத்துக்கு ரூ.75 கோடி தியேட்டர் உரிமை

அஜித்தின் 59-வது படமான நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. கதாநாயகியாக வித்யாபாலன் வருகிறார். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வந்து கோர்ட்டில் வாதாடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. படத்துக்கு அஜித் உள்ளிட்ட அனைத்து நடிகர்-நடிகைகளும் டப்பிங் பேசி முடித்துள்ளனர். தற்போது பின்னணி இசை கோர்ப்பு பணியை தொடங்கி இருப்பதாக யுவன்சங்கர் ராஜா வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார். பில்லா, பில்லா-2, ஆரம்பம், மங்காத்தா படங்களுக்கு பின்னணி இசை பக்கபலமாக இருந்தது என்றும், அதேபோல் நேர்கொண்ட பார்வை படத்துக்கும் பின்னணி இசை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது படத்துக்கான வியாபாரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ்நாடு…

வைகோ மீதான தேச துரோக வழக்கில் ஜூலை 5-ம் தேதி தீர்ப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கில் ஜூலை 5-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2009-ல் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கிறது. 2009-ல் பதிவான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஜூலை 5-ல் தீர்ப்பு வழங்குகிறது.

முஸ்லீம் எம்.பிக்கள் இருவர் மந்திரிகளாயினர் மைக் பொம்பியோ இலங்கை விஜயம் ரத்து

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். ------ அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின் திட்டமிடப்பட்டிருந்த இலங்கைக்கான விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாலும், தவிர்க்க முடியாத காரணத்தினாலும், இலங்கைக்கான விஜயத்தை அவரால் மேற்கொள்ள முடியவில்லை எனவும், கொழும்பிலுள்ள அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள முடியாமையையிட்டு, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ கவலை வெளியிட்டுள்ளதாகவும், கொழும்பிலுள்ள அமெரிக்க…