உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி பேட்டிங்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 24-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது.

ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது.

வெற்றியை தொடர இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும். வெற்றி கணக்கை தொடங்க ஆப்கானிஸ்தான் அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இருப்பினும் சொந்த மண்ணில் ஆடும் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி சமாளிப்பது கடினம் தான்.

Related posts