வலைதளங்களில் வைரல் ஆகும் நயன்தாரா புகைப்படம்

தமிழ் பட உலகில், ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருப்பவர், நயன்தாரா. இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளன.

நயன்தாராவுக்கும், சிம்புவுக்கும் இடையே முதலில் காதல் மலர்ந்தது. பின்னர், இருவரும் பிரிந்து விட்டனர். அதைத்தொடர்ந்து நடிகரும், டைரக்டருமான பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இந்த காதலும் சில வருடங்களில் முறிந்து போனது. இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருகிறார்கள்.

நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். விக்னேஷ் சிவன் கைவசம் படங்கள் எதுவும் இல்லை. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

இருவரும் இப்போது, புதுமண தம்பதிகள் போல் உலகின் பல்வேறு நாடுகளில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தேனிலவுக்கு செல்லக்கூடிய நாடுகளை தேர்வு செய்து சுற்றி வருகிறார்கள்.

தேன்நிலவு ஜோடிகளுக்கு உகந்த கிரீஸ் நாட்டுக்கு இருவரும் ஜோடியாக சென்றுள்ளனர். அங்கு விக்னேஷ் சிவன், நயன்தாராவை வெள்ளை உடையில் புதிய தோற்றத்தில் புகைப்படம் எடுத்து இருக்கிறார். அதை தன்னுடைய ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். அதாவது, ஒரு கண்ணாடி அறைக்குள் நயன்தாரா நிற்பது போன்றும், கண்ணாடிக்கு வெளியே விக்னேஷ் சிவன் நின்று செல்போனில் புகைப்படம் எடுப்பது போன்றும் அந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.

இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related posts