ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2 நாட்கள் கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கிர்கிஷ்தான் சென்றுள்ளார்.

இந்த மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். உயர் மட்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக தெரிகிறது. அமேதியில், ரஷ்யா துப்பாக்கி தொழிற்சாலை அமைக்க உள்ளதையடுத்து, புதினிடம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா உள்பட 8 நாடுகள் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உறுப்பினராக உள்ளன. முன்னதாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கையும் சந்தித்தது கவனிக்கத்தக்கது.

Related posts