60-வது படத்தில் கார் பந்தய வீரர் வேடத்தில், அஜித்

அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ என்ற இந்தி படம் தமிழில், ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில், அஜித்குமார் நடித்து இருக்கிறார். இது, அவருக்கு 59-வது படம். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். வினோத் டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். போனிகபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது முதல் தமிழ் படம். இந்த படம் வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் தனது 60-வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தையும் வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது, முழுக்க முழுக்க அதிரடி சண்டை படமாக இருக்கும், படப்பிடிப்பு…

வலைதளங்களில் வைரல் ஆகும் நயன்தாரா புகைப்படம்

தமிழ் பட உலகில், ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருப்பவர், நயன்தாரா. இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளன. நயன்தாராவுக்கும், சிம்புவுக்கும் இடையே முதலில் காதல் மலர்ந்தது. பின்னர், இருவரும் பிரிந்து விட்டனர். அதைத்தொடர்ந்து நடிகரும், டைரக்டருமான பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இந்த காதலும் சில வருடங்களில் முறிந்து போனது. இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருகிறார்கள். நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். விக்னேஷ் சிவன் கைவசம் படங்கள் எதுவும் இல்லை. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் இப்போது, புதுமண தம்பதிகள் போல் உலகின் பல்வேறு நாடுகளில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தேனிலவுக்கு செல்லக்கூடிய நாடுகளை தேர்வு செய்து சுற்றி வருகிறார்கள். தேன்நிலவு ஜோடிகளுக்கு…

வடிவேலுவுக்கு, சமுத்திரக்கனி கண்டனம்

வடிவேலு கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. இந்த படத்தை சிம்புதேவன் டைரக்டு செய்திருந்தார். ஷங்கர் தயாரித்து இருந்தார். ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கரும், படக்குழுவினரும் திட்டமிட்டனர். இரண்டாம் பாகத்தில் நடிக்க வடிவேலுவும் சம்மதித்தார். அதைத்தொடர்ந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியது. இதற்காக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. டப்பிடிப்பு தொடங்கும் நிலையில், வடிவேலுவுக்கும், இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டைரக்டர் ஷங்கர் புகார் செய்தார். இந்த படத்தை முடித்து கொடுக்காமல் வடிவேலு வேறு புதிய படத்தில் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து வடிவேலு ஒரு பேட்டியில், ‘ஷங்கரை கிராபிக்ஸ் இயக்குனர் என்றும், சிம்புதேவனை சினிமா தெரியாதவர், வேலை…

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2 நாட்கள் கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கிர்கிஷ்தான் சென்றுள்ளார். இந்த மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். உயர் மட்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக தெரிகிறது. அமேதியில், ரஷ்யா துப்பாக்கி தொழிற்சாலை அமைக்க உள்ளதையடுத்து, புதினிடம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா உள்பட 8 நாடுகள் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உறுப்பினராக உள்ளன. முன்னதாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கையும் சந்தித்தது கவனிக்கத்தக்கது.

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறுவார்கள் : விஜயகாந்த்

நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணியினர் வெற்றி பெறுவார்கள் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என்று பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். நலிந்த நிலையில் உள்ள நாடக நடிகர்களுக்கு உதவ வேண்டும் என பாக்கியராஜ் கூறியுள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி தான் பேசவில்லை என பாக்கியராஜ் விளக்கமளித்துள்ளார். விஷால் அணியினர் சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்பதால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம் என ஐசரி கணேஷ் கூறினார்.

இந்திய விமானப் படை விமானம் விபத்து 13 பேரும் ..

இந்திய விமானப் படையின் ஏ.என்.32 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் இறந்திருப்பதை இந்திய விமானப்படை உறுதி செய்தது. விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்தததில் ஒருவர் கூட பிழைக்கவில்லை என்பது தெரியவந்தது. 13 பேர் உயிரிழந்துவிட்டதாக அவர்களது குடும்பத்தாருக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.