இன்று மாலை 3 மணி வரை 21 முறைப்பாடுகள்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும். அதன்படி இன்று (12) மாலை 3 மணி வரை 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பதிவு செய்யப்பட்ட 21 முறைப்பாடுகளில் 11 முறைப்பாடுகள் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று வரை 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக, பொலிஸ் தலைமையகத்தில் விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன வேறுபாடின்றி சமமாக நடத்தப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், சுவிட்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் ஆகியவற்றுடனான உடன்படிக்கையின் பிரகாரம் பின்வரும் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வெளியிடுகின்றது. இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இந்த நடவடிக்கைகள் சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு செயற்பாடுகளுக்கு தடங்கலாக அமைந்துள்ளதாகவும் நாம் கருதுகின்றோம். தப்பான எண்ணத்தை தோற்றுவிக்கும், உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிடுகின்றமை சகியாமையை தூண்டுவதாக அமைந்துள்ளன. பிரதமருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது எமது கருத்துக்களை நாம் பகிர்ந்து கொண்டோம். அச்சந்தர்ப்பத்தில் வெறுக்கத்தக்க பேச்சுகளுக்கு எதிராகவும், மதங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் அமைப்பை நிறுவுவதிலும் அரசாங்கம் காண்பிக்கும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை நாம் வரவேற்றோம். சகல சமூகங்களிடையேயும் சமாதானத்தை பேணி நிலை நிறுத்துவது தொடர்பில் அனைத்து இலங்கையர்களுடனும் நாம்…

டென்மார்க்கின் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் போலீஸ் ரவி மரணம்

டென்மார்க்கின் சிறந்த தமிழ் திரைப்பட நடிகரும், நாடக நடிகரும் சிறந்த கலைஞர் விருது பெற்றவருமான ரவிச்சந்திரன் நடராஜா அவர்கள் தனது 57 வது வயதில் சுகயீனம் காரணமாக மரணமடைந்தார். நேற்று செவ்வாய்க்கிழமை 11.06.2019 மாலை நெஞ்சு வலி ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவினர் தீவிர சிகிச்சை வழங்கியும் சிகிச்சை பலனின்றி மரணித்தார். இவர் டென்மார்க்கில் தயாரான ஐந்து வரையான முழு நீள தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த இளம்புயல், உயிர்வரை இனித்தாய் ஆகிய திரைப்படங்கள் தமிழகத்திலும் வெளியாகியுள்ளன. இலங்கையிலும் வெளியாகியுள்ளன. இவருடைய பாத்திரம் கூடுதலாக போலீஸ் பாத்திரமாகவே இருக்கும், அதனால் போலீஸ் ரவி என்று அழைக்கப்பட்டு வந்தார். தமிழகத்தின் பிரபல நடிகர்களான சிறீமன், கருணாஸ் மற்றும் பூர்ணிதா போன்றவர்களுடன் ஈடு கொடுத்து அபாரமாக நடித்து பாராட்டுப்பெற்றவர். இவர் பூக்கள் திரைப்படத்தில் போலீஸ் கமிஷனரான நடித்து…