பயங்கரவாத தாக்கத்தில் இருந்து இலங்கை விரைவில் மீண்டெழும்

பயங்கரவாத தாக்கத்தில் இருந்து இலங்கை விரைவில் மீண்டெழும் என தான் நம்புவதாக இந்தியப் பிரதமர் மோடி, நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை சென்று பார்வையிட்ட இந்தியப் பிரதமர் இதனை தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதுடன் .பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட தேவ ஆராதனையிலும் ஈடுபட்டார். அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts